அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
கொவிட்-19: யுவிசி அடிப்படையிலான கிருமி நீக்க கொள்கலன் வடிவமைப்பு
Posted On:
08 JUN 2020 1:26PM by PIB Chennai
மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும், தன்னாட்சி அறிவியல் வளர்ச்சி மையமான இண்டர்நேஷனல் அட்வான்ஸ்டு ரிசர்ச் செண்டர் ஃபார் பவுடர் மெட்டலார்ஜி அண்டு நியூ மெட்டீரியல்சும், மெக்கின்ஸ் தொழில்நிறுவனமும் இணைந்து புறஊதாக்கதிர்கள் அடிப்படையிலான கொள்கலன் ஒன்றை உருவாக்கியுள்ளன. கொவிட்-19 தொற்றைத் தடுப்பதற்காக, மருத்துவமனையில் பயன்படுத்தும் அதிக முக்கியத்துவம் இல்லாத பிறபொருட்கள், பரிசோதனைச் சாலையில் அணிபவை, தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகிய அனைத்தையும் கிருமி நீக்கம் செய்வதற்காக இந்தக் கொள்கலன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வணிக வளாகங்களில் வாடிக்கையாளரின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள பொருட்களையும், வீட்டு உபயோகப் பொருட்களையும் கிருமி நீக்கம் செய்வதற்காகவும் இந்தக் கொள்கலனைப் பயன்படுத்தலாம். இதில் புறஊதாக்கதிர் விளக்குகள், கிருமி நீக்கம் செய்வதற்காக பொருத்தப்பட்டுள்ளன.
-----
(Release ID: 1630206)
Visitor Counter : 251