பாதுகாப்பு அமைச்சகம்

மிஷன் சாகர்: ஐஎன்எஸ் கேசரி கப்பல் செஷல்சில் உள்ள விக்டோரியா துறைமுகத்தைச் சென்றடைந்தது

प्रविष्टि तिथि: 07 JUN 2020 8:21PM by PIB Chennai

மிஷன் சாகரின் ஒரு பகுதியாக, இந்திய கடற்படைக் கப்பலான கேசரி, செஷல்சில் உள்ள விக்டோரியா துறைமுகத்தை ஜூன் 7-ம் தேதியன்று சென்றடைந்தது. கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில், நட்பு நாடுகளுக்கு இந்திய அரசு உதவி வருகிறது. இதனையொட்டி செஷல்ஸ் நாட்டு மக்களுக்கு, கொவிட் தொடர்பான அத்தியாவசிய மருந்துகளை ஐஎன்எஸ் கேசரி கப்பல் எடுத்துச் சென்றுள்ளது.  இதனை அலுவலக ரீதியாக, செஷல்ஸ் நாட்டு அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்வு ஜூன் 7-ம் தேதி நடைபெற்றது.

கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் அது தொடர்பான சிக்கலான பிரச்சனைகளை எதிர்த்துப் போராடும் நிலையில்,  இருநாடுகளுக்கும் இடையே சிறப்பான உறவுகளை “மிஷன் சாகர்” கட்டமைக்கிறது.

-----


(रिलीज़ आईडी: 1630177) आगंतुक पटल : 307
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Marathi , English , Urdu , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi