மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
புகழ்மிக்க திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட பணிகளின் முன்னேற்றத்தை மறுஆய்வு செய்வதற்கான கூட்டத்திற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் தலைமை தாங்குகிறார்.
प्रविष्टि तिथि:
05 JUN 2020 7:03PM by PIB Chennai
புதுடில்லியில் இன்று புகழ்பெற்ற கல்வித் திட்டத்தின் (IoE) கீழ் அனுமதிக்கப்பட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த மறுஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ரமேஷ் போகாரியல் ‘நிஷாங்க்’ பங்கேற்றார். மத்திய மனித வளத்துறையின் செயலர் திரு. சஞ்சய் தோத்ரே கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். கூட்டத்தில் செயலாளர் திரு அமித் கரே மற்றும் திரு. சந்திர சேகர் (IOE) ஆகியோர் கலந்து கொண்டனர். மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் பணியகத் தலைவர்கள், பல்வேறு நிறுவனங்களின் பல்வேறு இயக்குநர்கள் மற்றும் பல்வேறு புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களின் துணைவேந்தர்கள் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டனர்.
அப்போது ஐ.ஐ.டி.களின் இயக்குநர்கள் குழு அமைக்கப்படலாம் என்று அமைச்சர் கூறினார், இது நிறுவனங்களின் கருத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் மற்றும் சர்வதேச தரவரிசைகளை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதைக் குறித்து ஆலோசிக்கும் என்றார். மேலும் இந்தியாவில் தரமான கல்வித் திட்டத்திற்கான (Brand building of the study scheme) செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் உயர்கல்வி நிதிநிறுவனத்தின் பணிகளை 15 நாட்களில் கண்காணிக்க மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தில் திட்ட மேலாண்மை பிரிவு நிறுவப்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் அமைச்சர் கூறினார்.
திரு. நிஷாங்க் ஒவ்வொரு நிறுவனமும் மூன்று வருட தொலைநோக்கு ஆவணத்தைத் தயாரித்து தொகுத்து மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பலாம் என்றார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) மற்றும் தனியார் நிறுவனங்களை ஆய்வு செய்வது தொடர்பான பிரச்சினைகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
*****
(रिलीज़ आईडी: 1629876)
आगंतुक पटल : 284