சுற்றுலா அமைச்சகம்

நமது நாட்டைப் பாருங்கள் வரிசையின் கீழ் சுற்றுலா அமைச்சகத்தின் 28வது இணையக் கருத்தரங்கான "இந்தியா- கோல்ப் வீரர்களின் சொர்க்கம்", இந்தியாவில் கோல்ப் சுற்றுலாக்கான சாத்தியங்களைப் படம்பிடித்துக் காட்டியது

Posted On: 05 JUN 2020 5:00PM by PIB Chennai

இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம், நமது நாட்டைப் பாருங்கள் வரிசையின் கீழ் 28வது இணையக் கருத்தரங்கை "இந்தியா- கோல்ப் வீரர்களின் சொர்க்கம்" என்னும் தலைப்பில் 4 ஜூன், 2020 அன்று நடத்தியது. நாடெங்கிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள கோல்ப் ஆர்வலர்களுக்கு 365 நாட்களும் கோல்ப் விடுமுறை அனுபவத்தை வழங்கும் முக்கிய இடங்கள் மற்றும் தொலைதூர இடங்களில் கோல்ப் விளையாடுவதின் சிலிர்ப்பு மற்றும் மகிழ்ச்சியூட்டும் சாத்தியங்களை இந்த இணையக் கருத்தரங்கு படம்பிடித்துக் காட்டியது. பேஷனல்ஸ் இணை நிறுவனர் ராஜன் சேகல்; பீலாஸ்ட் டிராவல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் அமிஷ் தேசாய்; மை கோல்ப் டூர் நிர்வாக இயக்குநர் அருண் ஐயர் ஆகியோர் வழங்கிய இந்த நிகழ்ச்சிக்கு, சுற்றுலா அமைச்சகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திருவாளர். ரூபிந்தர் பிரார் நெறியாளராக இருந்தார். மூவரும் பயணம் மற்றும் சுற்றுலாத் துறையில் பல வருடங்கள் அனுபவமும், நிபுணத்துவமும் பெற்றிருப்பதோடு மட்டுமில்லாமல், தீவிர கோல்ப் ஆர்வலர்களாகவும் இருந்து நாட்டில் கோல்ப் சுற்றுலாவை ஒருத் தனிப்பட்ட சுற்றுலாப் பிரிவாக ஊக்குவித்து வருகிறார்கள். ஒரே பாரதம், சிறப்பான பாரதம் திட்டத்தின் கீழ் இந்தியாவின் வளமானப் பன்முகத்தன்மையை படம் பிடித்துக் காட்டும் முயற்சியாக இருக்கும் நமது நாட்டைப் பாருங்கள் இணையக் கருத்தரங்கு வரிசைஒரே பாரதம், சிறப்பான பாரதத்தின் கொள்கைகளை பல்வேறு தளங்களில் தொடர்ந்து பரப்பி வருகிறது.

 

"மத்திய பிரதேசத்தின் வன ஆச்சரியங்கள்" என்னும் தலைப்பினான அடுத்த இணையக் கருத்தரங்கு, 6 ஜூன், 2020 அன்று நடைபெறும். பதிவு செய்து கொள்ள https://bit.ly/WildwondersDAD என்னும் முகவரியில் பதிவு செய்து கொள்ளவும்.



(Release ID: 1629737) Visitor Counter : 179