பாதுகாப்பு அமைச்சகம்

பஹ்ரைன் மற்றும் ஓமனில் இருந்து இந்தியா வந்த 176 இந்தியக் குடிமக்கள், கொச்சி கடற்படை தளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் தனிமைப்படுத்துதல் காலத்தை நிறைவு செய்தனர்.

Posted On: 04 JUN 2020 7:42PM by PIB Chennai

ஹ்ரைன்,ன் ஆகிய இடங்களிலிருந்து வந்த 176 இந்தியர்கள் கட்டாயமாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கவேண்டிய காலத்தை இன்று நிறைவு செய்தனர். கொச்சி கடற்படைத் தளத்தில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். தெற்குக் கடற்படை கமாண்டின் கோவிட் பாதுகாப்பு மையத்தில் கடந்த இரு வாரங்களாக தங்க வைக்கப்பட்டிருந்த இவர்கள், தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லவிருக்கிறார்கள்.

 

இந்த (CCC) மையத்தில் தங்கியிருந்த போது, அவர்களுக்கு அனைத்து வேளைகளிலும் உணவு, தூய்மைப்படுத்திக் கொள்வதற்கான உபகரணங்கள், கண்காணிப்பிலான மருத்துவ சிகிச்சை, வைஃபை வசதி, தொலைபேசி வசதி, புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டுகள் கரன்சி மாற்றம் ஆகியவையும், இதர அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டன. அனைவருக்கும் RT-PCR பரிசோதனைகள் செய்யப்பட்டன. அவர்கள் முகாமிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவதற்கு முன் அவர்கள் யாரும் நோயால் பாதிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த மையத்திலிருந்து இன்று கடைசியாக புறப்பட்ட 49 இந்தியர்கள் ஓனிலிருந்து வந்தவர்கள். ஜூன் 1, 2 தேதிகளில் வெளியேறிய 127 இந்தியர்கள் பஹ்ரைனில் இருந்து வந்தவர்கள். கொச்சியில் உள்ள இந்த 200 படுக்கைகள் கொண்ட கடற்படை தனிமைப்படுத்தும் முகாம், மார்ச் மாதம் 20ஆம் தேதி ஏற்படுத்தப்பட்டது. விடுமுறைக் காலம் முடிந்த பிறகு, கொச்சிக்குத் திரும்பும் கடற்படைப் பணியாளர்களுக்கான முகாமாக இது செயல்பட்டு வந்தது.

 

ஹ்ரைன் மற்றும் ஓனில் இருந்து வரும் பணியாளர்களுக்காக இது குறைந்த காலத்தில் மாற்றியமைக்கப்பட்டது. தெற்குக்ற்படை கமாண்ட்டின் கற்படை மருத்துவர்கள், ற்படை விமானப் பணியாளர் பள்ளிப் பணியாளர்கள் ஆகியவர்களால் இந்த முகாம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

கோவிட்-19 நோய்க்கு எதிரான போராட்டத்தில் நாட்டிற்கு அனைத்து ஆதரவையும் அளிப்பதற்காக இந்தியக் கடற்படை அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஹர் காம் தேஷ் கே நாம் ஒவ்வொரு செயலும் தேசத்தின் பெயரால் என்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் அது தன் கடமையை ஆற்றி தீர்மானங்களைப் பூர்த்தி செய்து வருகிறது



(Release ID: 1629576) Visitor Counter : 163