ரெயில்வே அமைச்சகம்

ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரியின் கடமையும், மனிதநேயமும் அனைவரின் இதயங்களையும் கவர்ந்தது.


திரு. பியூஷ் கோயல், பாராட்டத்தக்க செயலைப் புகழ்ந்து பண விருதை அறிவித்தார்

Posted On: 04 JUN 2020 3:58PM by PIB Chennai

ரயில்வே பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் திரு. இந்தர் சிங் யாதவின் பாராட்டத்தக்க செயலைப் பாராட்டிய ரயில்வே, வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் திரு. பியுஷ் கோயல் அவரை கௌரவிப்பதற்காக ரொக்க விருதை அறிவித்தார். திரு. யாதவ் 4 மாதக் குழந்தைக்குப் பால் வழங்குவதற்காக ரயிலின் பின்னால் ஓடி, ஒரு முன் மாதிரியான கடமை உணர்வை வெளிப்படுத்தினார்.

 

திருமதி ஷெரீப் ஹாஷ்மி தனது கணவர் திரு ஹசீன் ஹாஷ்மி மற்றும் தனது 4 மாத குழந்தையுடன் பெல்காமில் இருந்து கோரக்பூர் செல்லும் ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் சென்று கொண்டிருந்தார். ரயிலில் அவரது குழந்தை பாலுக்காக அழுதது, ஆனால், முந்தைய எந்த நிலையத்திலும் குழந்தைக்குப் பால் கிடைக்காததால், போபால் நிலையத்தில் உள்ள கான்ஸ்டபிள் திரு. யாதவிடம் உதவி கேட்டார்.

திரு. இந்தர் சிங் யாதவ் உடனடியாக விரைந்து போபால் நிலையத்திற்கு வெளியே உள்ள ஒரு கடையில் இருந்து ஒரு பாக்கெட் பால் கொண்டு வந்தார், ஆனால் ரயில் நகரத் தொடங்கியது. கான்ஸ்டபிள், ஓடும் ரயிலின் பின்னால் ஓடி, ரயில் பெட்டியில் இருந்த பெண்மணியிடம் பால் பாக்கெட்டை வழங்கி தனது மனிதநேயத்தையும் தைரியத்தையும் வெளிப்படுத்தினார்.

 

********



(Release ID: 1629399) Visitor Counter : 205