சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

புதிய வாகனங்களின் பதிவு, ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் பழைய வாகனங்களின் பயன்பாட்டை நிறுத்துவது தொடர்பான மோட்டார் வாகன விதிகளை மாற்றுவது குறித்து பொதுமக்களிடம் இருந்து ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன

Posted On: 03 JUN 2020 4:50PM by PIB Chennai

புதிய வாகனங்களின் பதிவு, ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் பழைய வாகனங்களின் பயன்பாட்டை நிறுத்துவது தொடர்பாக மோட்டார் வாகன விதிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பொதுமக்களிடம் இருந்து ஆலோசனைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மறுபடியும் வரவேற்றுள்ளது. இதைப் பற்றிய அறிவிப்பு, இதற்கு முன்னர் இந்த வருடம் 18 மார்ச் அன்று வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், பொது முடக்க நிபந்தனைகளால் ஏற்பட்ட பாதிப்பால், அறிவிப்பு குறித்து அறிந்து கொள்ளவும், கருத்துகளை வழங்கவும் பங்குதாரர்களுக்கு போதுமான வாய்ப்பு தரப்பட வேண்டும் என்று உணரப்பட்டது.

 

இது தொடர்பாக 29 மே, 2020 அன்று வெளியிட்டப்பட்ட இரண்டு அறிவுப்புகளை www.morth.gov.in என்னும் இணையதளத்தில் காணலாம்.

 

மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின் 4-28 பிரிவை 336() எண்ணுடைய வரைவு அறிவிப்பு குறிக்கிறது. கீழ்கண்ட முக்கிய விஷயங்களை இது கவனத்தில் கொள்கிறது:

 

* மின்னணு படிவங்கள் மற்றும் ஆவணங்களின் பயன்பாடு (மருத்துவச் சான்றிதழ், கற்போர் உரிமம், ஓட்டுநர் உரிமத்தைத் திரும்ப ஒப்படைத்தல், ஓட்டுநர் உரிமப் புதுப்பிப்பு)

 

* ஆன்லைன் கற்போர் உரிமம்

 

* தேசியப் பதிவேடு

 

* முகவர் மையப் பதிவு

 

* 60 நாட்களுக்கு முன்னரே உரிமம் புதுப்பித்தல்

 

* 30 நாட்களுக்கான நீட்டிப்புடன் 6 மாதங்களுக்கு தற்காலிகப் பதிவு (வண்டியைக் கட்டமைத்தல் போன்றவைக்காக

 

* வணிகச் சான்றிதழ் - மின்னணு

 

* மாறுதல்கள், கூடுதல் பாகங்களைப் பொருத்துதல் மற்றும் கைமாறும் வாகனங்கள்

 

* மாற்றத்துக்குள்ளான வாகனங்களுக்கான காப்பீடு

 

மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின் 39-40 பிரிவை 337() எண்ணுடைய வரைவு அறிவிப்பு குறிக்கிறது. கீழ்கண்ட விஷயங்களை இது கவனத்தில் கொள்கிறது:

 

* பழுதான வாகனங்களைத் திரும்பப்பெறும் கொள்கை

 

. திரும்பப் பெறுவதற்கான செயல்முறை

. விசாரணை அதிகாரிக்கு அளிக்கப்படும் தகவல்கள் குறித்த செயல்முறை

. விசாரணை முறை- குறித்த நேரத்துக்குள் (6 மாதங்கள்)

. சோதனை முகமைகளின் பங்களிப்பு

 

* உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் பாகங்களைப் பொருத்துபவர்களின் கோரிக்கைகள்

 

* சோதனை முகமைக்களுக்கான அங்கீகாரம்

 

இணைச் செயலாளர் (போக்குவரத்து), சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், டிரான்ஸ்போர்ட் பவன், நாடாளுமன்ற சாலை, புது தில்லி - 11001 (email: jspb-morth[at]gov[dot]in) என்னும் முகவரிக்கு இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்ட 60 நாட்களுக்குள் ஆலோசனைகள் அல்லது கருத்துகளை அனுப்பலாம். ஏற்கனவே அனுப்பப்பட்ட கருத்துகளை மீண்டும் அனுப்பத் தேவையில்லை.

 

***



(Release ID: 1629146) Visitor Counter : 274