பாதுகாப்பு அமைச்சகம்
ரூ. 1,094 கோடி மதிப்பில் 156 டாங்கிகள்: ஆயுதத் தொழிற்சாலை வாரியத்திடம் வாங்குகிறது பாதுகாப்புத் துறை
Posted On:
02 JUN 2020 7:38PM by PIB Chennai
இந்திய ராணுவத்தின் தரைப்படைக்கு உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் 156 பிஎம்பி 2/2கே ரக டாங்கிகளை பாதுகாப்புத் துறை தருவிக்கிறது. இதற்கான ஆர்டரை ஆயுதத்தொழிற்சாலை வாரியம் (Infantry Combat Vehicles) பாதுகாப்புத்துறையிடம் பெற்றுள்ளது. உள்நாட்டிலேயே உற்பத்தி செய் (Make in India) என்ற திட்டத்துக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த வணிகம் நடைபெறுகிறது. இதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் மேடக்கில் அமைந்துள்ள ஆயுத உற்பத்தி ஆலையில் இந்த டாங்கிகள் ரூ. 1,094 கோடி மதிப்பில் தயாரிக்கப்படும். இந்திய ராணுவத்தில் அதி நவீன வசதிகளுடன் கூட இந்த டாங்கிகள் இடம்பெறும்.
156 பிஎம்பி 2/2கே ரக டாங்கிகள் 285 குதிரை சக்தி கொண்ட இயந்திரங்களைக் கொண்டு இயங்கும். டாங்கிகள் குறைந்த எடையோடு உருவாக்கப்படுவதால் போர்க்களத்தில் இவற்றை எளிதாக இயக்க முடியும். இந்த டாங்கிகள் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் ஓடக் கூடியவை. அத்துடன், தண்ணீரிலும் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் இயங்கும் ஆற்றல் கொண்டவை.
156 பிஎம்பி 2/2கே ரக டாங்கிகள் உற்பத்தி 2023ஆம் ஆண்டு பூர்த்தியாகி, இந்தியப்படையில் சேர்க்கப்படும். தற்போது பயன்படுத்தப்படும் டாங்கிகளை விட கூடுதல் திறன் பெற்றிருக்கும். இதனால் படை பலம் மேலும் அதிகரிக்கும்
(Release ID: 1628929)
Visitor Counter : 188