ரெயில்வே அமைச்சகம்

ஜூன் 2, காலை வரையில் 4155 சிறப்பு ரயில்களில் 57 லட்சம் பயணிகள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பினர்

Posted On: 02 JUN 2020 7:45PM by PIB Chennai

பொது முடக்கத்தால் பிற மாநிலங்களில் தங்கியிருக்க நேர்ந்துவிட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப்பயணிகள், மாணவர்கள் போன்றோர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை அடுத்து கடந்த மே 1ஆம் தேதி முதல்  “ஸ்ரமிக் சிறப்பு ரயில்கள்மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

அதன்படி, இன்று 2020, ஜூன் 2ஆம் தேதி காலை வரையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 4155 “ஸ்ரமிக் சிறப்பு ரயில்கள்இயக்கப்பட்டன. அதன்படி இன்று காலையில் மட்டும் நாடு முழுதும் 102 ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன. இவற்றின் மூலம் கடந்த 33 நாட்களாக இயக்கப்பட்டுவந்தஸ்ரமிக் சிறப்பு ரயில்கள்மூலம் 57 லட்சம் பேர் தங்களது சொந்த மாநிலங்களுக்குத் திரும்பியுள்ளனர்.

குஜராத் (1027 ரயில்கள்), மகாராஷ்டிரா (802 ரயில்கள்), பஞ்சாப் (416 ரயில்கள்), உத்தரப்பிரதேசம் (288 ரயில்கள்), பிகார் (294 ரயில்கள்) ஆகிய மாநிலங்களிலிருந்து இந்த ரயில்கள் புறப்பட்டன.

இந்தஸ்ரமிக் சிறப்பு ரயில்கள்பல்வேறு மாநிலங்களைச் சென்றடைந்து பயணத்தைப் பூர்த்தி செய்துள்ளன. அதிகபட்சமாக ஐந்து மாநிலங்களில் ரயில்கள் இயக்கப்பட்டன. உத்தரப்பிரதேசம் (1670 ரயில்கள்), பிகார் (1482 ரயில்கள்), ஜார்க்கண்ட் (194 ரயில்கள்) ஒடிசா (180 ரயில்கள்), மேற்குவங்கம் (135 ரயில்கள்). தற்போது இயக்கப்படும்  எந்த ரயிலிலும் நெரிசல் இல்லை.

ஸ்ரமிக் சிறப்பு ரயில்களுடன் தில்லியுடன் இணைக்கப்படும் ராஜதானி ரயிலைப் போல வசதிகள் கொண்ட 15 ஜோடி ரயில்களுடன் கூடுதலாக 200 ரயில்கள் ஜூன் 1ஆம் தேதி முதல் இயக்கப்படுகின்றன.


(Release ID: 1628928) Visitor Counter : 224