அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

ஜோர்ஹட் சி எஸ் ஐ ஆர் - என் இ ஐ எஸ் டி மையத்தில் கோவிட்-19 பரிசோதனைக் கூடம் தொடக்கம்.

Posted On: 02 JUN 2020 10:51AM by PIB Chennai

அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக் கவுன்சிலின் (CSIR) அறிவியல் தொழில்நுட்ப வடகிழக்கு மையத்தின் (NEIST) ஜோர்ஹட் வளாகத்தில், கோவிட்-19 பரிசோதனைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அசாம் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா இந்தப் பரிசோதனைக் கூடத்தை தொடங்கி வைத்தார்.  இந்த முக்கிய நிகழ்வு சிஎஸ்ஐஆர் – என்இஐஎஸ்டி வரலாற்றில் முக்கிய மைல் கல் என அதன் இயக்குநர் டாக்டர் ஜி.நரஹரி சாஸ்திரி கூறினார்.

     அசாமில் இந்தப் பரிசோதனைக் கூடத்தைத் திறக்கும் முதல் ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையம் அறிவியல் தொழில்நுட்ப வடகிழக்கு மையம் தான் என பாராட்டிய டாக்டர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா, இந்த மையத்தை உருவாக்கியதற்காக அதன் விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்களை  பாராட்டினார்.

-----


(Release ID: 1628712) Visitor Counter : 293