நிதி அமைச்சகம்

கடந்த காலத்துக்கான (ஆகஸ்ட் 2017 முதல் ஜனவரி 2020 வரை) ஜி.எஸ்.டி தாமதக் கட்டணம் விதிப்பது குறித்து அடுத்து ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

Posted On: 01 JUN 2020 8:09PM by PIB Chennai

ஜி.எஸ்.டி.ஆர் 3பி (GSTR 3B ) வரித்தாக்கல் படிவத்தை சமர்ப்பிக்காமல் இருப்பதற்கான தாமதக்கட்டணத்துக்கு விலக்கு அளித்தல் தொடர்பான டிவீட்டுகளை கடந்த காலத்தில் அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு வந்ததுசரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி) அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து அதாவது ஆகஸ்ட் 2017இல் இருந்து வரித்தாக்கலுக்கான தாமதக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதே பெருவாரியானவர்களின் கோரிக்கை ஆகும்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியான சூழலில் ரூ.5 கோடிக்கும் குறைவான ஆண்டுத் தொழில் தொகை உள்ள சிறிய வர்த்தகர்களுக்கு உதவும் வகையில் நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் ஏற்கனவே பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே 2020 மாதங்களுக்கான ஜி.எஸ்.டி வரித்தாக்கல் காலக்கெடுவை ஜுன் 2020 வரை நீட்டித்து அறிவித்துள்ளார்இந்த காலகட்டத்துக்கு தாமதக் கட்டணம் விதிக்கப்படாது.

தற்போதைய கோரிக்கைகள் கடந்த காலகட்டத்துக்கு (ஆகஸ்ட் 2017 முதல் ஜனவரி 2020 வரை) தாமதக்கட்டணம் தள்ளுபடி செய்தல் தொடர்பாக உள்ளதுவரி செலுத்துவோர் வரிகளை உரிய காலக்கெடுவுக்குள் செலுத்துவதை உறுதி செய்வதற்காகத்தான் தாமதக் கட்டணம் விதிக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்பொருள்களை வாங்கியவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட கட்டணம் மீதான வரிகளும் அரசுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைகளும் உரிய காலத்தில் செலுத்தப்பட வேண்டும் என்பதை தாமதக் கட்டணம் விதிப்பது உறுதிப்படுத்துகிறதுமேலும் சட்டத்துக்கு உட்பட்டு நடப்பதற்காக குறிப்பிட்ட நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வதாகவும் இது இருக்கிறதுதாமதக் கட்டணம் போன்ற ஷரத்து இல்லாவிட்டால் நேர்மையான மற்றும் சட்டத்துக்கு உட்பட்டு நடக்கின்ற வரிசெலுத்துவோரை பாதகமான நிலையில் பாகுபடுத்துவது போல ஆகிவிடும்.



(Release ID: 1628646) Visitor Counter : 167