பாதுகாப்பு அமைச்சகம்

தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் இதர பொருள்களில் கிருமி நீக்கம் செய்ய 'தீவிரத்தூய்மை’யைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனம் (DRDO) உருவாக்கியுள்ளது.

Posted On: 01 JUN 2020 5:55PM by PIB Chennai

தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், மின்னணு பொருள்கள், ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களில் கிருமி நீக்கம் செய்வதற்காக, தீவிரத்தூய்மை ' என்னும் கிருமி நீக்கம் செய்யும் அலகை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனம் (DRDO) உருவாக்கியுள்ளது.

 

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனத்தின் தில்லியை சேர்ந்த ஆய்வகமான அணு மருத்துவம் மற்றும் தொடர்புடைய அறிவியல் நிறுவனம் (INMAS), தொழில் பங்குதாரரான காசியாபாத்தில் உள்ள திருவாளர்கள். ஜெல் கிராப்ட் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட்டுடன் இணைந்து இந்தப் பொருளை உருவாக்கியுள்ளது.

 

பன்முகத் தடைத் தடுப்பு அணுகுமுறை மற்றும் கிருமி நீக்கத்துக்கான ஒசோனேற்றம் செய்யப்பட்டப் பகுதி தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய மேம்படுத்தப்பட்ட ஆக்சிஜனேற்ற செயல்முறையை இந்த அமைப்பு பயன்படுத்துகிறது.

 

கிருமி நீக்க செயல்பாட்டுக்குத் தேவைப்படும் ஒசோனை சிறைபிடிப்பதை உறுதி செய்யும் ஓசோனை உள்ளடக்கும் தொழில்நுட்பத் திறன் வாய்ந்த இரண்டு அடுக்குகளால் ஆனது இந்த அமைப்பு. சுற்றுப்புறத்துக்குத் தீங்கு விளைவிக்காத, அதாவது பிராண வாயு மற்றும் தண்ணீரை மட்டுமே வெளியிடும் வினையூக்கி மாற்றியையும் இது தன்னகத்தே கொண்டுள்ளது.

 

தொழிலக, பணி சார்ந்த, தனிப்பட்ட மற்றும் சுற்றுப்புறப் பாதுகாப்புக்கான சர்வதேச தரநிலைகளுக்கு உட்பட்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஒசோனேட்டட் ஸ்பேஸ் மற்றும் திரிநேத்ரா டெக்னாலஜி என்னும் இரு வகைகளில் அல்ட்ரா ஸ்வச் வருகிறது. ஓசோனேற்றம் செய்யப்பட்ட பகுதி மற்றும் தீவிர வெளிப்படும் முறையின் சேர்க்கையே திரிநேத்ரா டெக்னாலஜி (முக்கண் தொழில்நுட்பம்) ஆகும். விரைவாகக் கிருமி நீக்கம் செய்வதற்காக தானியங்கி முறையில் இந்த செயல்முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

15 ஆம்பியர், 220 வோல்ட்ஸ், 50 ஹெர்ட்ஸ் மின்சாரத்தில் இந்த அமைப்பு செயல்படுகிறது. பாதுகாப்பான முறையில் அதிக நேரம் இயங்குவதை உறுதி செய்வதற்காக, அவசர கால நிறுத்தம், கதவுகளுக்கிடையேயான பூட்டுகள், இரட்டைக் கதவு, தாமதப்படுத்தும் முறை, கசிவுக் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை இந்த அமைப்பு தாங்கி வருகிறது. ஒரே நேரத்தில் அதிக அளவில் கிருமி நாசம் செய்வதற்காக இந்த தொழிலக அறை அமைப்பு 7’x4’x3.25’ என்னும் அளவில் வருகிறது. தொழில் நிறுவனங்களுக்காக பல்வேறு அளவுகளிலும் இந்த அமைப்பு கிடைக்கும்.

***
 



(Release ID: 1628442) Visitor Counter : 326