தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியர்களுக்கு அதிக ஓய்வூதியம் கிடைக்கும்.

Posted On: 01 JUN 2020 3:42PM by PIB Chennai

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் ரூ.868 கோடி ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியத்தில் தொகுப்பு நிதி மதிப்பை மீண்டும் ஏற்படுத்துவதற்கான நிலுவை ரூ.105 கோடியை விடுவித்துள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன அறங்காவலர்களின் மத்திய வாரியப் பரிந்துரையின்படி, தொழிலாளர்களின் தொகுப்பு நிதி மதிப்பை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்ற நீண்ட காலக் கோரிக்கையை 15 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. முன்னர்  ஓய்வூதியத்தில் தொகுப்பு நிதி மீட்புக்கான வாய்ப்பு இல்லாமல், தொகுப்பு நிதிக்கான குறைக்கப்பட்ட ஓய்வூதியத்தை ஆயுள் முழுக்கப் பெற்று வந்தனர். ஈ.பி.எஸ்.-95 -இன் கீழ் பயன்பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக அமைந்துள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் 135 பிராந்திய அலுவலகங்கள் மூலம் 65லட்சம் ஓய்வூதியர்கள் உள்ளனர்.  முடக்கநிலை அமல் காலத்தில் 2020 மே மாதத்திற்கு, ஓய்வூதியம் ஓய்வூதியர்களுக்கு உரிய தேதியில் வங்கிக் கணக்கில்  செலுத்தப்படுவதை உறுதி செய்ய ஈ.பி.எப்.ஓ. அதிகாரிகளும், அலுவலர்களும் சிரமங்களைப் பாராமல் கடுமையாகப் பணிகளை மேற்கொண்டனர்.



(Release ID: 1628410) Visitor Counter : 442