எரிசக்தி அமைச்சகம்

பொது முடக்க காலத்தின் போது 19,000 ஊழியர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் கற்பதற்கும், திறன்களை வளர்ப்பதற்குமான வாய்ப்புகளை NTPC என்டிபிசி விரைவுபடுத்தி உள்ளது .

प्रविष्टि तिथि: 01 JUN 2020 2:37PM by PIB Chennai

இந்தியாவின் மிகப் பெரிய மின் உற்பத்தி நிறுவனமும், மத்திய மின் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய பொதுத்துறை நிறுவனுமான தேசிய அனல் மின் கழகம் லிமிடெட் (National Thermal Power Corporation Limited – NTPC) தனது 19 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும், கற்பதற்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளது. கோவிட்-19 காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்க காலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், என்டிபிசி தனது ஊழியர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில், கல்வி வளர்ச்சி உத்தி ஒன்றை வடிவமைத்து ஆன்லைன் பயிற்சி மூலமாக அவர்களின் திறனை வளர்த்தெடுத்துள்ளது. அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு ஊழியர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் இந்தக் கற்றல் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள உதவும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஊழியர்கள் தொழில்நுட்பக் கல்வி பெறுவதற்காக உலக வங்கியுடன் இணைந்து ஆன்லைன் தொழில்நுட்ப வகுப்புகளையும் என்டிபிசி நடத்துகிறது. இந்த வகுப்புகளில் பங்கேற்பது; பங்கேற்பவர்கள் திறமைகளை மதிப்பீடு செய்வது; வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவது என அனைத்தும் ஆன்லைனில் நடைபெறுவதற்கு, நிறுவனம் வகை செய்துள்ளது

 


(रिलीज़ आईडी: 1628380) आगंतुक पटल : 292
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Punjabi , Telugu