மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

ஒரே இந்தியா சிறந்த இந்தியா என்ற உணர்வைப் பரப்புவதற்கும், அடிப்படைக் கடமைகள் பற்றி இளைஞர்களிடம் உணர்த்துவதற்கும் ‘‘அடிப்படை கடமைகள் பற்றிய நினைவூட்டல்’’ என்ற சிறு காணொளியை பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகத்தின் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம் மன்றம்’ தொடங்கி வைத்துள்ளது .

Posted On: 31 MAY 2020 12:44PM by PIB Chennai

நமது அடிப்படை கடமைகள் பற்றி இளைஞர்களுக்கு உணர்த்த, பஞ்சாப் பதிந்தா பல்கலைக்கழகம் (CUPB)  ‘‘அடிப்படைக் கடமைகள் பற்றிய நினைவூட்டல்’’ என்ற தலைப்பிலான ஒரு சிறு காணொளியை வெளியிட்டுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்தறை அமைச்சகத்தின் (MHRD) உத்தரவுப்படியும், பல்கலைக் மானியக்குழு (UGC) மற்றும் துணைணவேந்தர் பேராசிரியர் ஆர்.கே.கோலி வழிகாட்டுதல் படியும் ஒரே இந்தியா சிறந்த இந்தியா திட்டத்தின் கீழ் இந்த காணொளியை பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் ஒரே பாரதம் உன்னத பாரதம் மன்றம் (Ek Bharat Shresth Bharat Club – EBSB Club) இபிஎஸ்பி கிளப் தயாரித்துள்ளது.
 

இந்த காணொளியின் நோக்கம், பொறுப்புள்ள குடிமக்களாக, நமது சட்டரீதியான கடமைகளை ஒவ்வொருவரும் பின்பற்ற ஊக்குவிப்பது, கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த அரசு வழங்கிய தடுப்பு வழிகாட்டு விதிமுறைகளைப் பின்பற்ற ஒவ்வொருவரையும் ஊக்குவிப்பது மற்றும் விருப்பத்தை நிறைவேற்றும் (“Sankalp Se Sidhi Ki Aur" ) என்ற இயக்கத்தின் ஒரு பகுதியாக அனைவரும் இருக்கவேண்டும் என வேண்டுகோள் விடுப்பது ஆகும். இந்த காணொளியில், நாடு முழுவதும் 28 மாநிலங்களை பிரதிநித்துவப்படுத்தும் வகையில் பஞ்சாப் பதிந்தா பல்கலைக்கழகத்தின் ஒரே பாரதம் உன்னத பாரதம் மன்றத்தின் மாணவத் தன்னார்வலர்கள்  28 பேர் பங்கேற்று அடிப்படை கடமைகளை அந்தந்த   மாநிலத்தின் பிராந்திய மொழிகளில் மொழிபெயர்த்ளித்தனர்.



(Release ID: 1628182) Visitor Counter : 298