நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

நடப்பு 2019-20 சர்க்கரைப் பருவத்துக்கு அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள்.

Posted On: 30 MAY 2020 5:15PM by PIB Chennai

நடப்பு 2019-2020 சர்க்கரைப் பருவத்துக்கு உணவு, பொது விநியோகத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 40 லட்சம் மெட்ரிக் டன் இடைக்கால கையிருப்புப் பராமரிப்பதற்கு செலவுத் தொகை ரூ.1674 கோடியை அரசு திருப்பி அளிக்கிறது. 60 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கான செலவுகளை சமாளிக்க சர்க்கரை ஆலைகளுக்கு ஒரு டன்னுக்கு ரூ.10448 என்று உதவி வழங்குவதுடன் சேர்த்து இது அளிக்கப்படுகிறது. இதற்கான உத்தேச செலவு ரூ.6268 கோடியாக இருக்கும். 362 சர்க்கரை ஆலைகளுக்கும், மொலாசஸ் அடிப்படையிலான தனிப்பட்ட சாராய வடிப்பாலைகளுக்கும் ரூ.18600 கோடி அளவுக்கு எளிய கடன் வசதி அளிக்கப்படுகிறது. எத்தனால் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்காக இது அளிக்கப்படுகிறது. இதில் ஐந்து ஆண்டுகளுக்கான வட்டி சலுகைக்கு அரசு ரூ.4045 கோடி அளிக்கிறது.

நடப்பு 2019-20 சர்க்கரைப் பருவத்தில் (அக்டோபர் - செப்டம்பர்) கையிருப்பு நிலவரம்:

ஆரம்ப கையிருப்பு (01.10.2019 நிலவரத்தின்படி)          : 145 லட்சம் மெட்ரிக் டன்

2019-20ல் எதிர்பார்க்கப்படும் உத்தேச உற்பத்தி            : 270 லட்சம் மெட்ரிக் டன்

உள்நாட்டு நுகர்வுக்கான உத்தேச மதிப்பீடு                   : 240 லட்சம் மெட்ரிக் டன்

2019-29 காலத்தில் உத்தேச ஏற்றுமதி மதிப்பீடு             : 50 லட்சம் மெட்ரிக் டன் (MAEQ)

30.09.2020ல் உத்தேச கடைசி கையிருப்பு மதிப்பீடு      : 125 லட்சம் மெட்ரிக் டன்

கடைசிக் கையிருப்பு (30.04.2020இல்)                              : 235 லட்சம் மெட்ரிக் டன்

  • 2018-19 பருவத்திற்கு கரும்பு விலை நிலுவைத் தொகை (28.05.2020 தேதியின்படி)
  • (ரூ. கோடியில்)
  •  

 

FRP அடிப்படை

SAP அடிப்படை

கரும்பு விலை - தர வேண்டியது

81667

86723

கரும்பு - நிலுவை செலுத்தியது

80978

85908

கரும்பு விலை - பாக்கி

689

815

  • 2018-19 பருவத்தில் விவசாயிகளுக்கு கரும்பு விலை நிலுவை நிலவரம் (28.05.2019 தேதியின்படி)

நியாயமான லாபகரமான விலை (Fair and Renumerative PriceFRP) அடிப்படையில்                  :                                      ரூ.18140 கோடி

SAP, நியாயமான லாபகரமான விலை உள்பட நிலுவை                      :                                                                           ரூ.22970 கோடி

  • 2019-20 பருவத்தில் விவசாயிகளுக்கு கரும்பு விலை நிலுவை நிலவரம் (28.05.2020 தேதியின்படி)

 

(ரூ. கோடியில்)

 

 

FRP அடிப்படை

SAP அடிப்படை

கரும்பு விலை தர வேண்டியது

64261

69029

கரும்பு நிலுவை செலுத்தியது

47127

47791

கரும்பு விலை பாக்கி

17134

21238

 

 



(Release ID: 1628147) Visitor Counter : 178