பாதுகாப்பு அமைச்சகம்

ஐஎன்எஸ் கலிங்காவில் ‘அக்னிபிரஸ்தா’ ஏவுகணைப் பூங்கா அமைக்கப்படும்.

Posted On: 29 MAY 2020 4:04PM by PIB Chennai

ஐஎன்எஸ் கலிங்காவில் ‘’அக்னிபிரஸ்தா’’ என்னும் ஏவுகணைப் பூங்காவுக்கு மே 28-ஆம் தேதி கட்டளை அதிகாரி ராஜேஷ் தேப்நாத் , கிழக்கு மண்டலத் தலைமைத் தளபதி வைஸ் அட்மிரல் அதுல் குமார் ஜெயின் முன்னிலையில் அடிக்கல் நாட்டினார்.

ஏவுகணைப் பூங்கா ‘’அக்னிபிரஸ்தா’’ பணி நிறைவடைந்ததும், 1981-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கிழக்குக் கடற்படைக் கட்டளைத் தளத்தின் ஐஎன் எஸ் கலிங்காவில் பணியாற்றிய, அனைத்து அதிகாரிகள், மாலுமிகள், உதவிப் பணியாளர்களுக்கு அர்ப்பணிக்கப்படும். 2018 - 2019-ஆம் ஆண்டுக்கான பெருமைமிகு விருதை ஐஎன்எஸ் கலிங்கா பெற்றதைக் குறிக்கும் வகையில் இந்தப் பூங்கா அமைக்கப்படுகிறது.

1981 முதல் இன்று வரையிலான ஐஎன்எஸ் கலிங்காவின் ஏவுகணை வரலாற்றின் காட்சிப்படுத்துவதை ‘’ அக்னிபிரஸ்தா’’ நோக்கமாகக் கொண்டுள்ளது. ஏவுகணைகளின் தோற்றம், தரை ஆதரவு உபகரணத்தின் தோற்றத்துடன் அமைக்கப்படும் ஏவுகணைப் பூங்கா, இந்தத் தளம் கையாண்ட ஏவுகணைகளின் உருவாக்கத்தைப் பிரதிபலிப்பதாக அமையும். உள்தளத்தில் மறுசீரமைக்கப்பட்ட , பயன்படுத்தப்பட்ட பொருள்களிலிருந்து உருவாக்கப்பட்டவை காட்சிப்படுத்தப்படும். 1988 - 1991 காலகட்டத்தில், இந்தியக் கடற்படையில் சேவை புரிந்து வந்த பழைய நீர்மூழ்கிக் கப்பலான ‘சக்ரா’ ( சார்லி-1 நீர்மூழ்கி)- விலிருந்து  நீருக்கு அடியிலிருந்து ஏவப்பட்ட பி-70 ‘அமெடிஸ்ட்’ முக்கிய ஈர்ப்பாகும்.

பள்ளிக் குழந்தைகளில் இருந்து கடற்படைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின், ஏவுகணைகள் மற்றும் அவை தொடர்பான தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ளும் ஆவலைப் பூர்த்தி செய்வதுடன், ஊக்குவிக்கும் விவரங்களை வழங்கும் ஓரிடமாகவும் ‘’ அக்னிபிரஸ்தா’’ திகழும். இதன் உரிமையாளர் என்ற பெருமை உணர்வைப் பிரதிபலிக்கும் விதமாகவும், நம்பகத்தன்மை, ஒவ்வொரு முறையும் இலக்கைத் தாக்கும் துல்லியம் கொண்ட ஆயுதங்களை உருவாக்கிய, பதவி வேறுபாடு இன்றி அனைத்துப்பணியாளர்களின் பங்களிப்பை இது எடுத்துக்காட்டுவதாக அமையும்.

------------



(Release ID: 1627745) Visitor Counter : 289