மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் 45,000 உயர் கல்வி நிறுவனங்களின் தலைவர்களுடன் புதுதில்லியில் வெபினார் மூலம் கலந்துரையாடுகிறார்

Posted On: 28 MAY 2020 7:37PM by PIB Chennai

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் இன்று பெங்களூருவில் உள்ள தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (என்ஏஏசி) நடத்திய வெபினார் மூலம் நாடெங்கும் உள்ள 45,000-க்கும் மேற்பட்ட உயர் கல்வி நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடினார். நாடு முழுவதும் உள்ள துணைவேந்தர்கள் / பதிவாளர்கள் / பேராசிரியர்கள் / உள் தர உத்தரவாத செல் (ஐ.க்யூ.ஏ.சி) தலைவர்கள் / கல்லுரி முதல்வர்கள் / ஆசிரியர்கள் குழு ஆகியோரை உள்ளடக்கிய கல்வியாளர்களின் கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார்.

நோய்தொற்று பரவலின் இந்த தருணத்தில் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (என்ஏஏசி) எடுத்த முன்முயற்சிகளைப் பாராட்டிய அதேவேளையில், தற்போதைய நிலைமையை, அதன் அமைப்பில் உள்ள, கட்டுபாடுகளை எதிர்கொள்வதற்கான வாய்ப்பாகக் கருத வேண்டுமென நாட்டின் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்கு (எச்.இ.ஐ) திரு பொக்ரியால் அழைப்பு விடுத்தார். கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆன்லைன் முறைக்கு மாறவும், மாணவர்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் கல்வி அமர்வுக்கு இடையூறு ஏற்படாதவகையில், நிலைமையைப் பயன்படுத்திக் கொள்ளவும் அவர் வேண்டுக்கோள் விடுத்தார். இந்தியாவில் ஆன்லைன் சுற்றுச்சூழல் அமைப்பை சீரமைத்து, மேம்படுத்துவது அவசர தேவையாக உள்ளது என்று அமைச்சர்  குறிப்பிட்டார். ஆன்லைன் மூலம் கல்வியை போதிப்பது கிராமப்புறங்களையும் சென்றடையும் வகையில், கல்வியாளர்கள் தங்கள் பங்களிப்பை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுகொண்டார்.

நோய்தொற்று பரவல் காலகட்டத்தில், ஸ்வயம் பிரபா, தீக்ஷரம்ப், பரமார்ஷ் தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்ட முன்முயற்சிகள் மற்றும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் மத்திய அமைச்சர் விரிவாக எடுத்துரைத்தார். அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் என்ஏஏசி அங்கீகார செயல்பாட்டில் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

------



(Release ID: 1627623) Visitor Counter : 271