கலாசாரத்துறை அமைச்சகம்
ராம்கிங்கர் பைஜின் 115 வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் தேசிய நவீன கலைக்கூடம் காணொளி சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்யும்.
Posted On:
25 MAY 2020 6:54PM by PIB Chennai
கலாச்சார அமைச்சகத்தின் நவீன கலைக்கூடம் “ராம்கிங்கர் பைஜ், “அமைதியான மாற்றம் மற்றும் வெளிப்பாடுகள் பற்றிய ஒரு பயணம்” என்ற தலைப்பில் மே 26, 2020 அன்று ராம்கிங்கர் பைஜின் 115 வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஒரு காணொளி சுற்றுப்பயணத்திற்கு ஏற்பாடு செய்யும். இந்தக் கலைஞரால் உருவாக்கப்பட்ட 639 கலைப்படைப்புகளில் தேசிய நவின் கலைக்கூடம் (National Gallery of Modern Art - NGMA) பெருமை கொள்கிறது. இந்த காணொளி சுற்றுப்பயணம் ராம்கிங்கர் பைஜின் முக்கிய கலைப்படைப்புகளின் இருப்பு சேகரிப்பிலிருந்து கலைப்படைப்புகளை தேசிய நவின் கலைக்கூடம் முன் வைக்கிறது, இது (i) உருவப்படம், (ii) வாழ்க்கை ஆய்வு, (iii) படைப்புச் சுருக்கம் மற்றும் கலைப்படைப்புகளின் கலவை, (iv) இயற்கை ஆய்வுகள் மற்றும் நிலம் (v) சிற்பங்கள்.
நவீன கலைகளின் தேசிய கலைக்கூடத்தின் தலைமை இயக்குநர் திரு. அத்வைதா சரண் கடநாயக் கூறுகையில், நவீன இந்தியாவின் ஒரு சிறந்த ஓவியர் - கலைஞருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்தக் காணொளி சுற்றுப்பயணம் தொடங்கப்படுகிறது. அதிலும், இளம் கலைஞர்கள் இந்த உருவகம் மற்றும் சுருக்கமான வடிவமைப்புகள் இரண்டிலும் இந்தக் கலைஞரின் பரீட்சார்த்தமான அர்பணிப்பைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
இந்தக் காணொளி சுற்றுப்பயணத்தில் ‘ஜீவன்ஸ்மிருதி’ நினைவுப்பாதை வழியாக ஒளி மூலம், இந்த அற்புதக் கலைஞரின் 520 கலைப் படைப்புகளை ஐந்து தனித்தனி பிரிவுகளிலும், மூன்று ஸ்கெட்ச் புத்தகங்களிலும் காண்பிக்கப்படுகிறது. சுற்றுப்பயணத்தின் முடிவில், https://so-ham.in/ramkinkar-baij-journey-through-silent-transformation-and-expressions என்ற நவீன கலைகளின் தேசியக் கலைக்கூடப் பதாகையின் கீழ் முதல் கலாச்சார ஊடக மேடையில் 'உரையாடலில் பார்வையாளர்கள் இணையலாம்' / மேலும் காணொளி சுற்றுப்பயணத்தின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் வினாடி வினாவை முயற்சிக்கவும்.
நவீன இந்தியாவின் மிகச்சிறந்த கலைஞர்களில் ஒருவரான ராம்கிங்கர் பைஜ் ஒரு சிற்பி, ஓவியர் மற்றும் கிராஃபிக் கலைஞர் ஆவார்.
(Release ID: 1626937)
Visitor Counter : 168