எரிசக்தி அமைச்சகம்

ஆர்இசி லிமிடெடும் தாஜ்சேட்ஸும் இணைந்து முன்னணியில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு சத்தான உணவை வழங்குகின்றன

Posted On: 26 MAY 2020 12:02PM by PIB Chennai

நாடு முழுவதும் முக்கிய அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ பணியாளர்களுக்கும், அதேபோல் ஏழை தினக்கூலி தொழிலாளர்களுக்கும் உணவளிக்கும் திட்டத்தை மத்திய மின்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத் துறை நிறுவனமும், மிகப் பெரிய மின் நிதி நிறுவனங்களில் ஒன்றான  ஆர்இசி லிமிடெட் முன்னணியில் கொண்டு செல்கிறது.

புதுதில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து உணவுப் பொட்டலங்களை வழங்க, ஆர்இசி நிறுவனத்தின்  கார்பரேட் சமூகப் பொறுப்பு பிரிவான (CSR) ஆர்இசி அறக்கட்டளை, தாஜ்சேட்ஸ் (IHCL மற்றும் SATS Ltd ஆகியவற்றின் கூட்டு முயற்சி நிறுவனம்) நிறுவனத்துடன் இணைந்துள்ளதுபுதுதில்லியின் முன்னணி சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், ஒவ்வொரு நாளும் 300 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன. இந்த நடவடிக்கை மூலம் புதுதில்லியில், 18,000-க்கு மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படவுள்ளன.

அதே நேரத்தில், ஆர்இசி பல்வேறு மாவட்ட நிர்வாகத்தினர், தொண்டு நிறுவனங்கள், மின் விநியோக நிறுவனங்களுடன் (DISCOMS) இணைந்து நாடு முழுவதும் உள்ள ஏழை மக்களுக்கு சமைத்த உணவுகள் மற்றும் ரேஷன் பொருட்களை  ஏற்கனவே வழங்கி கொண்டிருக்கிறது. இந்த நடவடிக்கை, தேசியளவிலான முடக்கம் தொடங்கிய போது ஆரம்பிக்கப்பட்டது. முடக்க காலம் முழுவதும் இந்த நடவடிக்கை தொடரும். மே 24, 2020ம் தேதி வரை, இந்த நிறுவனம் 4.58 லட்சம் கிலோ கிராம் உணவு தானியங்களையும், 1.26 லட்சம் உணவுப் பொட்டலங்களையும், 9,600 லிட்டர் கிருமிநாசினிகளையும், 3,400 பிபிஇ பாதுகாப்பு உடைகள் மற்றும் 83,000 முக கவசங்களையும் வழங்கியுள்ளது.

********



(Release ID: 1626908) Visitor Counter : 204