பிரதமர் அலுவலகம்

“அர்த் கங்கா திட்டம்” குறித்து பிரதமர் பரிசீலனை: ஏற்றத்தாழ்வுகளை சரி செய்வது மக்களை இணைப்பது.

Posted On: 15 MAY 2020 8:00PM by PIB Chennai

அர்த் கங்கா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வகுக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று பரிசீலித்தார்.

 

கங்கை நதிக்கரையோரத்தில் பொருளாதார செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்காக அர்த் கங்கா திட்டத்தை 14 டிசம்பர் 2019 அன்று கான்பூரில் நடைபெற்ற தேசிய கங்கை கவுன்சிலின் முதலாவது கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி கருத்துருவாக்கினார்.

 

கங்கை நதியைப் போக்குவரத்துக்கு பாதுகாப்பான ஒரு வழியாக மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஜல் மார்க் விகாஸ் திட்டம், (JMVP)- நீர் வழி மேம்பாட்டுத் திட்டம் உலக வங்கியின் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கங்கை நதிக்கரையோரத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பொருளாதார செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்கு கவனம் செலுத்துவதற்காக அங்குள்ள உள்ளூர் சமூக மக்களின் ஈடுபாட்டுடன், நீர்வழி மேம்பாட்டுத் திட்டத்தை மறுகட்டமைப்பு (re engineer) செய்வதே அர்த் கங்கா திட்டத்தின் வருங்கால திட்டமாகும். உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய இடங்களில் உள்ள நதிக் கரையோரங்களில், பொருளாதாரச் செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்காக, இத்திட்டத்தின் கீழ் சமூக அளவிலான பொருளாதாரச் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில், சிறிய படகுத்துறைகள் கங்கை நதிக்கரை கரையோரங்களில் ஏற்படுத்தப்படும். இந்த நான்கு மாநிலங்களிலும் கங்கை நதிக்கரையோரத்தில் உள்ள  இடங்களில், 40 மிதக்கும் படகுத் துறைகள், (கார்களை ஒரு கரையிலிருந்து மறுகரைக்குச் ஏற்றி இறக்கக் கூடிய) 10 ரோ ரோ டெர்மினல்கள் அமைக்கப்படும். இதனால் விவசாயிகள் தங்களது விளைபொருள்களை எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்துச் செலவு குறையும்.

 

 

வணிக வாய்ப்புகள், சந்தைகளை அணுகுவதற்கான வழிகள் ஆகிய நன்மைகளை அளிப்பதோடு மட்டுமல்லாமல், அங்குள்ள உள்ளூர் மக்கள் பொருளாதார மேம்பாடு அடையவும், பயணிகள் வசதியையும் அர்த் கங்கா அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல், பெரிய அளவிலான கைத்தொழில் திறமைகளை அதிகரிக்கவும், பொதுத்துறை/ தனியார்துறை திறன் வளர்ச்சியையும் இத்திட்டம் உறுதி செய்யும். அடுத்த 5 ஆண்டுகளில் 5,000 கோடி ரூபாய் அளவிற்கான பொருளாதார நன்மைகள் கிடைக்கும் வகையில், கங்கை நதிக்கரையில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் கிரியா ஊக்கியாக அர்த் கங்கா திட்டம் செயல்படும்.

 

இக்கூட்டத்தின் போது மத்திய கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு மான்ஸுக் மாண்டவ்யா(Release ID: 1626756) Visitor Counter : 289