சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

புதுதில்லி நசப்கரில் உள்ள சவுத்ரி பிரம் பிரகாஷ் ஆயுர்வேத சரக் சனஸ்தானத்தின் கோவிட்-19 பிரத்யேக சுகாதார மையத்தை டாக்டர்.ஹர்ஷ் வர்தன் பார்வையிட்டார்

Posted On: 24 MAY 2020 7:21PM by PIB Chennai

புதுதில்லி, நசப்கர் பகுதியில் உள்ள சவுத்ரி பிரம் பிரகாஷ் ஆயுர்வேத சரக் சனஸ்தானில் (CBPACS) அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக கோவிட்-19 சுகாதார மையத்தை (DCHC) மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷ் வர்தன் இன்று பார்வையிட்டார்.

கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை அவர் ஆய்வு செய்தார். டாக்டர்கள் குழுவினருடன் கலந்துரையாடிய அமைச்சர், கோவிட்-19 நோயாளிகள் நலம் குறித்து விசாரித்தார். கோவிட்-19 சுகாதார மையத்தில் கிடைக்கும் வசதிகள் குறித்தும், ஆயுர்வேத மருந்துகளின் சிகிச்சையால் கிடைத்த பலன் குறித்து நோயாளிகள் கூறியதை அவர் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வு மற்றும் கலந்துரையாடலுக்குப் பின், சவுத்ரி பிரம் பிரகாஷ் ஆயுர்வேத சரக் சனஸ்தானின், பிரத்யேக கோவிட்-19 சுகாதார மையத்தின் செயல்பாடு குறித்து டாக்டர்.ஹர்ஷ் வர்தன்  நிறைவு தெரிவித்தார். ஆயுர்வேத கொள்கைகளின் அடிப்படையில், கோவிட் நோயாளிகளுக்கு சிசிக்சை அளிக்கும் இந்தியாவின் முதல்  ஆயுர்வேத மருத்துவமனைக் குழுவினரின் மனநிலை, ஆர்வம், துணிவு மற்றும் முயற்சிகள் பாராட்டுக்குரியது என அவர் கூறினார். நாடு முழுவதும் ஆயுர்வேதம் மூலம் கொரோன நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில், சவுத்ரி பிரம் பிரகாஷ் ஆயுர்வேத சரக் சனஸ்தான் முக்கிய பங்காற்றுகிறது. இது குறித்து சுகாதார அமைச்சர் கூறுகையில், ‘‘இங்கு கோவிட்-19 நோயாளிகள் அளித்த சாதகமான பதில்கள் மகிழ்ச்சியளிக்கின்றன’’ என்றார். கோவிட்-19 நடவடிக்கை மற்றும் நிர்வாகத்தில் ஆயுர்வேதத்தை முன்னணியில் நிறுத்தியற்காக, சவுத்ரி பிரம் பிரகாஷ் ஆயுர்வேத சரக் சனஸ்தான் குழுவினர் மற்றும் அவர்களது அயராத முயற்சிகள் மற்றும் தலைமையை அவர் பாராட்டினார்.

கோவிட்-19 சிகிச்சைக்கு இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘இன்று நம்மிடம் 422 அரசு பரிசோதனைக் கூடங்களும், 177 தனியார் பரிசோதனைக் கூடங்களும் உள்ளன. இங்கு பரிசோதிக்கும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 1,50,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நேற்று 1,10,397 பரிசோதனைகள் செய்யப்பட்டன. நேற்று வரை மொத்தம் 29,44,874 பரிசோதனைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்’’ என்றார்.

நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள சுகாதார கட்டமைப்புகள் பற்றி அவர் கூறுகையில், ‘‘கோவிட்-19க்கு சிகிச்சை அளிக்க நாடு முழுவதும் போதிய சுகாதார கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவை 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கோவிட் பிரத்யேக மருத்துமனைகள்(DCHs), கோவிட் பிரத்யேக சுகாதார மையங்கள் (DCHCs) மற்றும் கோவிட் கவனிப்பு மையங்கள்(CCCs). இங்கு போதிய படுக்கைகள் மற்றும் இதர வசதிகள் உள்ளன’’ என்றார். இந்த வசதிகளின் எண்ணிக்கை குறித்து கூறிய அமைச்சர், ‘‘நாடு முழுவதும் மொத்தம் 968 பிரத்யேக கோவிட் மருத்துவமனைகள் 2,50,397 படுக்கைகளுடனும்,  (1,62,237 தனிமை படுக்கைகள் மற்றும் 20468 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள்); 2,065 பிரத்யேக கோவிட் சுகாதார மையங்கள்  1,76,946 படுக்கைகளுடனும் (1,20,596 தனிமை படுக்கைகள் மற்றும் 10,691 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள்); மற்றும் 7,063 கோவிட் கவனிப்பு மையங்கள் 6,46,438 படுக்கைகளுடனும் உள்ளன’’ என்றார்.


(Release ID: 1626701) Visitor Counter : 276