சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989இன் விதி 32 மற்றும் 81-இன் கீழ் கட்டாயமான விஷயங்களாகக் குறிப்பிடப்படும் கட்டணம் செலுத்தலுக்கான கால அவசாகம் நீட்டிப்பு, செல்லத்தக்க கட்டணம் செலுத்தும் அவகாசம் நீட்டிப்புக்கு அறிவிக்கை.

Posted On: 24 MAY 2020 4:16PM by PIB Chennai

கோவிட்-19 நோய்த் தாக்குதலை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் 24 மார்ச் 2020 தேதியிட்டு வெளியிட்ட 40-3/2020-DM-I(A)-இன் படியான மற்றும் அதன் தொடர்ச்சியாக செய்த திருத்தங்களில் கூறப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் தொடர்ச்சியாக, மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989 மற்றும் மோட்டார் வாகனங்கள் சட்டம் 1988 தொடர்பாக ஆவணங்களின் செல்லத்தக்க காலத்தை நீட்டிப்பது தொடர்பாக, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் 30 மார்ச் 2020 தேதியிட்டு ஓர் அறிவுறுத்தலை வெளியிட்டது. 2020 பிப்ரவரி 1 க்குப் பிறகு காலாவதியான அல்லது 2020 ஜூன் 30 வரையிலான காலத்திற்குள் காலாவதியாகும், ஆவணங்களின் செல்லத்தக்க காலத்தைப் பொருத்த வரையில், அவை 2020 ஜூன் 30 வரையில் செல்லும் என எடுத்துக் கொள்ளுமாறு இந்த விதிகளை அமல் செய்யும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989 விதி 32 மற்றும் 81இன் கீழ் கட்டாயமாக்கப்பட்ட பல்வேறு கட்டணங்கள் / தாமதக் கட்டணங்களைச் செலுத்துவதில் குடிமக்களுக்குச்  சிரமங்கள் இருப்பதாக அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. முடக்கநிலை அமல் காரணமாகவும், அரசுப் போக்குவரத்துத் துறை அலுவலகங்கள் மூடப்பட்டிருப்பதாலும் இந்த நிலை உள்ளது. சில நேர்வுகளில் சர்வீஸ் அல்லது புதுப்பித்தலுக்கு ஏற்கெனவே கட்டணம் செலுத்தப்பட்டு, முடக்கநிலை காரணமாக, அந்த செயல்பாடு முழுமை பெறாமல் உள்ளன. மேலும், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் மூடியிருப்பதால் கட்டணங்களை செலுத்துவதில் குடிமக்களுக்கு சிரமங்கள் இருக்கின்றன.

கோவிட்-19 காலத்தில் குடிமக்களுக்கு உதவும் நோக்கில், புதுப்பித்தல் உள்ளிட்ட விஷயங்களுக்காக 2020 பிப்ரவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு கட்டணங்கள் செலுத்தப்பட்டு, முடக்கநிலை சூழலில் செயல்பாடு பூர்த்தி செய்ய முடியாமல் உள்ள நேர்வுகளில், அந்தக் கட்டணம் தொடர்ந்து செல்லத்தக்கதாகவே இருக்கும் என்று அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் 2020 பிப்ரவரி 1 முதல் முடக்கநிலை முடியும் காலம் வரையில் கட்டணங்கள் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், 2020 ஜூலை 31 வரையில் அதற்காக கூடுதல் அல்லது தாமதக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்றும் அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

****(Release ID: 1626598) Visitor Counter : 286