அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
கொவிட்-19ஐ எதிர்த்துப் போரிடுவதில் உணவு மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உள்ள தொடர்பு.
Posted On:
23 MAY 2020 2:01PM by PIB Chennai
மக்களின் வாழ்க்கை, அவர்களின் சுகாதாரம் மற்றும் நலவாழ்வைத் தற்போதைய பெருந்தொற்றுப் பரவல் பாதித்துள்ளது. தினசரி வழக்கங்களுக்கு ஏற்பட்ட திடீர் இடையூறு, விருப்பமில்லாத தனி நபர் இடைவெளிச் சட்டங்கள் மற்றும் வெள்ளம் போல் வரும் தகவல்கள் நம் அனைவரையும் மன அழுத்ததிலும், குழப்பத்திலும் ஆழ்த்துகின்றன. தொடர் பயம், கவலையளிக்கும் மனநிலை, எரிச்சல், குற்றவுணர்வு, அவநம்பிக்கை மற்றும் கையாலாகாத்தனம், தூக்கமின்மை, பசியின்மை அல்லது உடல் எடை கூடுதல், கவனமின்மை மற்றும் நீண்ட காலமாக இருக்கும் நோய்கள் தீவிரமடைதல் ஆகியவை நமது ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் மன அழுத்தம் பாதித்துக் கொண்டிருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். பொது முடக்கக் காலத்தில், போதிய உடல் உழைப்பு இல்லாததாலும், பெருந்தொற்று குறித்த பயத்தினாலும் ஏற்கனவே இருக்கும், ஆனால் வெளியில் தெரியாத நோய்கள் தீவிரமடையலாம். இதனால், நமக்கு எந்த வாழ்க்கை முறை வியாதி இல்லாத போதும், நமது உடல் வலிமையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்தும் தேவை இருக்கிறது.
கொவிட்-19க்கு எதிராக எந்த குறிப்பிட்ட சிகிச்சையும், தடுப்பு மருந்தும், மருத்துவப் பரிந்துரைகளும் இல்லாத நிலையில், பச்சைக் காய்கறிகள், பழங்கள், கொட்டைகள், விதைகள், பருப்புகள், முழுதானிய உணவுகள், தூய்மையான எண்ணெய்கள் ஆகியவற்றை முடிந்த அளவு பயன்படுத்துவதும், சோடா, உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு உபயோகத்தைக் குறைப்பதும், சத்தற்ற, சர்க்கரை அதிகமுள்ள உணவுகளைத் தவிர்ப்பது ஆகியவற்றை உலக சுகாதார நிறுவனம், பிரிட்டிஷ் டயட்டெட்டிக்ஸ் சங்கம், மற்றும் யுடி உணவு மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அங்கீகரிக்கப்பட்ட சுகாதார நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன. உணவைத் தவிர, உடற்பயிற்சி, தியானம், போதிய தூக்கம் மற்றும் சூரிய ஒளி உடலின் மீது படுதல் ஆகியவற்றையும் வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன.
இந்தியாவின் பழமையான சிகிச்சை முறையான ஆயுர்வேதத்தின் பகுதிகளாக இந்தப் பரிந்துரைகளும், வழிகாட்டுதல்களும் எப்போதிலிருந்தோ உள்ளன. ஆஹார் (உணவு), விஹார் (வாழ்க்கை முறை), ஆச்சார் (ஒருவர் வெளி உலகத்திடம் எப்படி நடந்து கொள்கிறார்) மற்றும் விச்சார் (மன நலம்) ஆகிய நான்கு தூண்களின் மீது தான் வாழ்க்கை நிற்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது. இதன் படி, உணவு ஒரு மருந்தாகச் செயல்பட்டு, வாழ்க்கை, உணவு மற்றும் உடல் ஆகிய புலன்களோடுத் தொடர்பு ஏற்படுத்தி ஒருவரைக் குணப்படுத்தும். ஒருவரது உணவுத் தேர்வுகள், அளவுகள் மற்றும் வாழ்க்கை முறையை வைத்து அவரது மன, உடல் மற்றும் உணர்வு நிலைகளை முடிவு செய்து ஒழுங்குப்படுத்த முடியும். மரபணுக்கள், சூழ்நிலை, உணவு மற்றும் உணர்வுக் காரணிகளுக்குள் உள்ள நெருங்கியத் தொடர்பு, மனநிலை, உணவு மற்றும் வாழ்க்கை முறை நோய்களுக்கான சக்கரத்தை நோக்கி இட்டுச் செல்கின்றன. சுகாதாரமான வாழ்க்கை முறை, தியானம், பிராணாயாமம், போதியத் தூக்கம் மற்றும் சாத்வீகமான உணவு ஆகியவற்றின் மூலம் சுகாதாரமான, அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து, கொவிட்-19 உட்பட பல்வேறு நோய்களை எதிர்த்துப் போரிடலாம் என்று ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.
ஒழுங்கான உணவுத்தேர்வும், உணவுக்கட்டுப்பாட்டு முறையும் முழுமையான ஆரோக்கியத்தையும், அமைதியான மனதையும் பராமரிக்க உதவி செய்வதாக ஆயுர்வேதம் கருதுகிறது. உணவை அதன் தன்மைகளைப் பொருத்து மூன்று விதங்களாக பகவத் கீதையும், யோக சாஸ்திரங்களும் வகைப்படுத்தியுள்ளன. அவை சத்வ (சதோகுண), ராஜஸ (ராஜோகுண) மற்றும் தாமஸ (தாமோகுண) ஆகியவை ஆகும். சத்வ என்றால் நன்மை, ராஜஸ என்றால் முரட்டுத்தனமான/சுறுசுறுப்பானவை மற்றும் 'சிறப்பானவையில்' இருந்து 'மோசமானவை' வரையில் இருந்து பெறப்படுபவை, தாமஸ என்றால் செயலற்றவை. அமைதி, தூய்மை ஆகியவற்றை அளிக்கக்கூடிய, ஆயுள், புத்திசாலித்தனம், வலிமை, ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றை மேம்படுத்தக்கூடிய இயற்கையான, தேவையான மற்றும் சக்தி-அளிக்கக்கூடிய உணவுகள் மற்றும் உணவு முறையே சாத்விக் உணவு முறை எனப்படும். பழங்கள், காய்கறிகள், முளை தானியங்கள், பருப்புகள், கொட்டைகள் மற்றும் விதைகள், குறைந்த அளவிலான கொழுப்புள்ள பால் மற்றும் பால் பொருள்கள், தூய பழச் சாறுகள் மற்றும் சமைக்கப்பட்ட 3-4 மணி நேரங்களுக்குள் உண்ணக்கூடிய உணவு ஆகியவை சாத்விக் உணவு வகைகளுக்கான எடுத்துக்காட்டாகும்.
அதிகக் காரத்துடன், சூடாக அல்லது உறைப்பான, உவர்ப்பான அல்லது உப்பான சுவையுடன் இருப்பதே ராஜஸிக் உணவு முறை, அதாவது வேட்கையின் முறையாகும். எதிர்மறைத் தன்மை, வேட்கை, அமைதியின்மை ஆகியவற்றை ராஜஸிக் உணவுகள் கொண்டிருக்கும். காபி, குளிர்பானங்கள், தேநீர் ஆகிய பானங்கள், சாக்லேட், கேக், பிஸ்கட்டுகள், சிப்ஸ் போன்ற சர்க்கரைச் சத்து அதிகமுள்ள உணவுகள், அல்லது காரமான உணவுகள் ஆகியவை ராஜஸிக் உணவுகளுக்கான எடுத்துக்காட்டுகள் ஆகும். இந்த உணவுகளில் குளுக்கோஸ் சத்து அதிகம் இருப்பதால், அவை உடனடி சக்தியை அளித்தாலும், மனதை பாதிப்படைய செய்து உடலுக்கு உணவளிப்பதன் மூலம் உடல்-மன சமநிலையைக் கெடுக்கின்றன.
அறியாமையின் விளைவான டாம்சிக் உணவு முறை, அதிகமாக அல்லது வேகமாக சமைக்கப்பட்ட, மறுபடியும் சூடாக்கப்பட்ட, மைக்ரோவேவில் செய்யப்பட்ட அல்லது உறைநிலையில் இருந்த உணவுகளாகும். இறந்த உணவான ஆட்டுக்கறி, மீன், கோழி, முட்டை, மது, சிகரெட்டுகள் மற்றும் அடிமையாக்கும் போதை மருந்துகளையும் இதில் சேர்க்கலாம். செரிமானம் ஆவதற்கு கடினமான இந்த உணவு வகை, மந்தநிலையையும், சுறுசுறுப்பின்மையையும் பரிசாக வழங்கி, தூக்கத்தை நோக்கித் தள்ளும். உடல் எடைப் பெருக்கம், நீரிழிவு, இதய மற்றும் கல்லீரல் நோய்களுக்கு முக்கியக் காரணியாக இவை விளங்கும்.
பதப்படுத்தப்பட்ட மற்றும் சத்தற்ற உணவுகளாகக் கிடைக்கும் ரஜஸிக் மற்றும் டாம்சிக் உணவுகள், கார்போஹைட்ரேடுகள், சர்க்கரை மற்றும் கொழுப்பை அதிக அளவில் கொண்டிருக்கும். அதிக நாள் கெடாமல் இருக்கும் தன்மை, அதிக சுவை மற்றும் குறைந்த விலையின் காரணமாக, ஹை-ப்ருக்டோஸ் கார்ன் சிரப் (HFCS) மற்றும் டேபிள் சர்க்கரையின் கலவை தான் சுவையூட்டுவதற்காக உணவுத் தொழில்களால் பெரிதும் விரும்பப்படுகின்றது. இது நமது மூளையின் பாதுகாப்பு மையத்தை பாதித்து, ரத்த சர்க்கரை அளவு மற்றும் பசி எடுக்கும் தன்மையை மாற்றியமைக்கும் விதமாக, ஒட்டுமொத்த இனிப்புத்தன்மை உட்கொள்ளலில் 30 சதவீதத்தை அதிகரித்து, இன்சுலின் மற்றும் லெப்டீன் ஆகிய ஹார்மோன்களின் சுரப்பைத் தடுத்து, கிரெலின் தயாரிப்பையும் பாதிக்கிறது. பிரெஞ்சு பிரைஸ், டோனட்டுகள், கேக், பை கிரஸ்டு, பிஸ்கெட்டுகள், பதப்படுத்தப்பட பீசாக்கள், குக்கீஸ், கிரேக்கர்ஸ் மற்றும் ஸ்டிக் மார்கரைன் ஆகியவை ஹைட்ரோஜெனேட் செய்யப்பட்ட அல்லது செயற்கை மாறுபக்க கொழுப்பு (அல்லது மாறுபக்கக் கொழுப்பு அமிலங்கள்) மூலம் செய்யப்படுகின்றன. இது அவர்களது உணவுப் பதப்படுத்தும் தேவையை எளிதாக்குவதோடு, பயன்படுத்துவதற்கு எளிதாகவும், விலை மலிவாகவும், வறுக்கப்படும் வணிக உணவுகளில் பல முறை உபயோகப்படுத்தக் கூடிய விதத்திலும் இருக்கிறது. அதிக சர்க்கரை, அதிக கொழுப்பு மற்றும் விலங்குப் புரதத்தை உட்கொள்ளுதல் ரத்தச் சர்க்கரை அளவை பாதிப்படைய செய்து, கல்லீரலில் கொழுப்பு சேர்வதற்கும், அதிக யூரிக் அமிலம் சேர்வதற்கும், குறைவான சிறுநீரக செயல்பாட்டுக்கும் மற்றும் தமனி தடித்தலுக்கும், கொழுப்பு சேர்வதற்கும் வழிவகுத்துவிடும்.
அதே சமயம், பிராணா (உயிர் சக்தி) அதிகமிருக்கும் உணவு வகைகள், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள், நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளின் கலவையாக இருப்பதோடு, குறைந்த அளவிலான சர்க்கரை, உப்பு மற்றும் எண்ணெயோடும், விலங்குக் கொழுப்பு இல்லாமலும் இருக்கும். செரிமானம் ஆவதற்கு சுலபமானதாக இருக்கும் அந்த உணவு வகைகள், ஆயுர்வேதத்தின் ஆறு சுவைகளான (இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, உறைப்பு, கசப்பு மற்றும் கட்டுப்படுத்துதல்) ஆகியவற்றைப் பயன்படுத்தி செய்யப்பட்டிருக்கும். பரிந்துரைக்கப்பட்ட உடற்பயிற்சி, போதுமான ஓய்வு மற்றும் நேர்மறை மனநிலையோடு சேர்ந்த சாத்விக் உணவு, சக்தியின் பிறப்பிடமாக மட்டுமில்லாமல், அதிக உடல் எடைக் குறியீடு, இதய நோய்கள், உடல் பருமன், ரத்த அழுத்தம், இரண்டாம் வகை நீரிழிவு மற்றும் எலும்புப்புரை ஆகிய ஆபத்துகளைக் குறைக்கும். தூய்மையான, இயற்கையான, வலிமையான, புத்திசாலித்தனமான, சக்தி வாய்ந்த, மனதுக்கு அமைதியை அளிக்கக்கூடிய சாத்விக் உணவு முறை, ஒருவரின் ஆயுளை அதிகரிக்கச் செய்யும்.
அதே சமயம், வெங்காயம், பூண்டு, பெருங்காயம், தேநீர் மற்றும் காபி, வறுக்கப்பட்ட, காரமான, சர்க்கரை அதிகமுள்ள மற்றும் ஜங்க் உணவுகளைக் கொண்ட ரஜஸிக் மற்றும் டாம்சிக் உணவுகள், படபடப்பையும், சோம்பலையும், தூக்கத்தையும் உருவாக்கும். நரம்பு மண்டலத்தைத் தாக்கும் இந்த உணவு வகைகளை தினமும் உட்கொண்டால், வாழ்க்கையை அனுபவிப்பதற்கான வாய்ப்புகள் குறையலாம்.
தற்போதைய பெருந்தொற்றுக் காலத்திற்கான உணவுத் தேர்வுகள்:
பரிந்துரைக்கப்படும் உணவு
|
தவிர்க்கப்பட
வேண்டியவை
|
பரிந்துரைக்கப்படாதவை
|
பச்சையான அல்லது குறைந்த காரமுள்ள, வறுக்கப்பட்ட,
புதிதாக சமைக்கப்பட்ட எண்ணெய் உள்ள உணவு அதிக காரமுள்ள
வண்ணமயான காய்கறிகள், அல்லது பழைய
பழங்கள் வைட்டமின் ஏ,சி சத்துக்கள்,
ஆக்சிஜனேற்றிகள், நார்கள் குறைந்த அளவில்
மற்றும் இதர
நற்குணங்கள் நிறைந்தவை)
(வேகவைத்தல், வாட்டுதல் அல்லது
வாணலியில் வரட்டுதல் ஆகிய
முறைகளைப் பின்பற்றவும்)
|
குறைந்த காரமுள்ள,
எண்ணெய் உள்ள உணவு
பூண்டு, வெங்காயம்,
பருவமில்லாத காய்கறிகளை
குறைந்த அளவில்
|
வறுக்கப்பட்ட,
அதிக காரமுள்ள
பழைய உணவு
|
பருப்புகள் மற்றும் முழுதானிய
(ஓட்ஸ், பிரவுன் பாஸ்தா,
தினை, அரிசி, குய்னோ மற்றும்
முழு-கோதுமை, புதிய சப்பாத்திகள் மற்றும் ராப்புகள்)
|
பிரவுன் ரொட்டி
|
சுத்திகரிக்கப்பட்ட, உணவுகள்
(ஓட்ஸ், பிரவுன் பாஸ்தா, பதப்படுத்தப்பட்ட
தினை, அரிசி, குய்னோ மற்றும் உணவுகள் (வெள்ளை
முழு-கோதுமைப் புதிய பாஸ்தா மற்றும்
சப்பாத்திகள் மற்றும் ராப்புகள்) அரிசி, மற்றும்
வெள்ளை ரொட்டி),
நன்கு
பொறிக்கப்பட்ட
உணவுகள்
|
குறைந்த கொழுப்பு அல்லது
குறைக்கப்பட்ட கொழுப்பு
உள்ள பால், தயிர் போன்ற பால் பொருள்கள்
(செரிமானத் தன்மையை
வலுவூட்டும் ப்ரோபையோடிக்ஸ்
அதிகம் கொண்டது)
|
வெள்ளை இறைச்சிகள்
பன்றி மற்றும் சிவப்பு இறைச்சி
மீன் போன்ற
சிவப்பு இறைச்சியை
விட குறைந்த
வலுவூட்டப்பட்டக் கொழுப்புள்ள
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்
|
சிவப்பு இறைச்சி
|
உப்பில்லாத கொட்டைகள்,
விதைகள் (பூசணிக்காய், சூரியகாந்தி உப்மா, தலியா, பிரவுன் சர்க்கரை
மற்றும் பிளாக்ஸ் போன்றவை). இவை ரொட்டி மற்றும் பீ நட் அதிகம்
வைட்டமின் ஈ, நியாசின், ரிபோபிளேவின், புரதம், ஆரோக்கியமான கொழுப்பு, ஆண்டிஆக்ஸிடெண்ட்ஸ் மற்றும் நார்ச்சத்து கொண்டவை
|
இட்லி, தோசை, தோக்லா உப்பு மற்றும்
உப்மா, தலியா, பிரவுன்
ரொட்டி மற்றும் பீ நட், வெண்ணெய்.
|
(குக்கீஸ்,
அதிக உப்பு, சர்க்கரை உள்ள சமோசா,
கேக், சாக்லெட்),
ஊறுகாய்,
ஜாம்
|
முட்டைக் கரு, வலுவூட்டப்பட்ட
காலை உணவு பருப்புகள்
|
அதிக உப்பு
அல்லது சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள். கூடுதல் உப்பு, சர்க்கரையை கழுவி நீக்கிவிடலாம்.
|
கழுவப்பட்ட, அடைக்கப்பட்ட உணவுகள்
|
நிறைசெறிவில்லா கொழுப்புகள்
(மீன், அவகோடா, கொட்டைகள்,
ஆலிவ் எண்ணெய், சோயா,
கனோலா, சூரியாகாந்தி மற்றும்
கார்ன் எண்ணெய்). சக்தி உட்கொள்ளலில் 30 சதவீதத்துக்கு
குறைவாக கொழுப்பு
இதில் 10 சதவீதத்துக்கும் அதிகமானது நிறைசெறிவு மிக்க
கொழுப்பில் இருந்து
வந்திருக்கக் கூடாது
|
நிறைசெறிவு மிக்க கொழுப்புகள் (கொழுப்புள்ள
இறைச்சி, வெண்ணெய், தேங்காய் எண்ணெய், பன்றிக்கொழுப்பு)
|
டிரான்ஸ் கொழுப்பு
(துரித மற்றும் வறுக்கப்பட்ட பதப்படுத்திய உணவு,
பீசா, பைஸ்,
குக்கீஸ்,
மாகரீன்ஸ்,
ஸ்பெரெட்ஸ்)
|
புதியப் பழச் சாறு, குறைந்த
கொழுப்புள்ள லஸ்ஸி, சாஸ்,
எலுமிச்சை தண்ணீர்/சுடு தண்ணீர்,
மூலிகை தேநீர் (பாலிபெனால்,
பிளேவோனாய்ட்ஸ் மற்றும் சாறுகள், பழச்சாறு
ஆண்டிஆக்சிடெண்ட்ஸைக்
கொண்டிருக்கும்)
|
சர்க்கரை அதிகமுள்ள
குளிர்பானங்கள், சோடா மற்றும் இதர பானங்கள்
(பாலிபெனால், பேக் செய்யப்பட்ட பழச் சிரப்புகள், சக்தியளிக்கும் மற்றும் விளையாட்டு பானங்கள், யோகர்டு தேநீர், காபி, குடிக்கத் தயாராய் கிடைக்கும் தேநீர், காபி)
|
மது, புகையிலை, போதைப்பொருள்கள்.
|
தேன், வெல்லம்
|
பழுப்பு சர்க்கரை
|
வெள்ளை சர்க்கரை
|
இந்திய மூலிகைகள்:
கொத்தமல்லி, மஞ்சள், தனியா,
துளசி, சீரகம், சோம்பு, இலவங்கம்,
கருப்பு மிளகு, இலவங்கப்பட்டை,
இஞ்சி மற்றும் கறிவேப்பிலை
ஆக்ஸிஜனேற்றிகள் கொண்ட
இந்த பொருள்கள், பாக்டீரியாவுக்கு
எதிராகச் செயல்பட்டு, உடலுக்கு
சக்தியை அளிக்கின்றன, சைனஸ்
போன்றவை விலக உதவுகின்றன.
கல் உப்பு (ஒரு நாளைக்கு 5 கிராம்
உப்பு (ஒரு டேபிள் ஸ்பூனுக்கு சமமானது) போதும்.
|
அயோடைஸ்டு உப்பு
|
நான்- அயோடைஸ்டு உப்பு
|
நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்குவதற்காக சுய பராமரிப்பு வழிகாட்டுதல்களை இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் தற்போதைய வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன. மூலிகை தேநீர் மற்றும் துளசியில் இருந்து செய்யப்பட்ட டிகாக்ஷன், தால்சினி, காளிமிர்ச், காய்ந்த இஞ்சி, வெல்லத்துடன் கூடிய உலர் திராட்சை, எலுமிச்சை சாறு ஆகியவை கொவிட்-19க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கும் என்று இந்த வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. குளிர்ந்த, பதப்படுத்தப்பட்ட மற்றும் அதிக உணவுகள், அதாவது ரஜஸிக் மற்றும் டாம்ஸிக் உணவுகளை, தவிர்க்குமாறு இந்த வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன. தேவையான ஓய்வு, நேரத்துக்கு தூக்கம், சூரிய ஒளி மேலே படுதல், யோகாசனம் மற்றும் பிராணாயாமப் பயிற்சிகள் ஆகியவை நமது உடல், மனம் மற்றும் வாழ்க்கை முறையை சமநிலைப்படுத்த உதவும் என்று பரிந்துரைகள் கூறுகின்றன.
நிலையில்லாத்தன்மை உள்ள மற்றும் சிகிச்சை கிடைக்காமல் இருக்கும் இந்த சமயத்தில், உடல் நலனோடும் அமைதியாகவும் இருப்பது முக்கியம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. மேலே பரிந்துரைக்கப்பட்ட உணவு வகைகள் போன்ற உணவுகளோடு, நல்ல பழக்கவழக்கங்கள், நோய் எதிர்ப்புத் தன்மையை கட்டமைப்பதோடு, மன அழுத்தத்தைக் குறைத்து, கொவிட்-19ஐ எதிர்த்து போரிடும் வலிமையை அளிக்கிறது.
(இதை எழுதியவர்கள்: ஜோதி சர்மா, விஞ்ஞானி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் எஸ். கே வர்ஷ்னே, தலைவர், சர்வதேச இருதரப்பு ஒத்துழைப்பு பிரிவு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை )
*(இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துகள் இதை எழுதிவர்களின் சொந்தக் கருத்துகளே, அவர்கள் சார்ந்துள்ள நிறுவனங்களுடையது அல்ல).
(Release ID: 1626461)
Visitor Counter : 415