வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

கோவிட் -19க்கு எதிரான நடவடிக்கையில் முக்கிய இடம் பிடித்த அஜ்மீர் ஸ்மார்ட் நகரின் போர்க்கால அறை.

Posted On: 23 MAY 2020 4:40PM by PIB Chennai

கோவிட் -19 போர்க்கால நடவடிக்கை அறை ஒன்றை நாகர் நிகாமில் அஜ்மீர் மாநகராட்சி அமைத்துள்ளது. மூத்த நிர்வாக அதிகாரிகள் தலைமையில் செயல்படும் அந்த அறையுடன் மருத்துவ மற்றும் காவல் அதிகாரிகள் இணைந்து செயல்படுகின்றனர். கோவிட் -19 பாதிப்பின் தற்போதைய நிலைமையைக் கண்காணித்து, மக்களுக்கு மேலும் பரவாமல் தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர்.

கோவிட்-19 வைரஸ் தாக்குதலைக் குறைக்க அஜ்மீர் மாநகராட்சி நிர்வாகம் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகள்:

பொது அறிவிப்பு ஏற்பாடு (பி.ஏ.) - கோவிட் -19 தொடர்பான விழிப்புணர்வுத் தகவல்கள் தீயணைப்புத் துறை மற்றும் அஜ்மீர் மாநகராட்சியின் தூய்மைப் பணித் துறையின் உதவியுடன் பொது அறிவிப்பு நடைமூலம் அறிவிக்கப்படுகின்றன.

உணவு மற்றும் தங்கும் இடம்: வீடற்றவர்கள் நகரில் குறிப்பிடப்பட்ட தங்கும் இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் உதவி தேவைப்படும் நிலையில் உள்ள மக்களுக்கு சமைத்த உணவும், அத்தியாவசியத் தேவைக்கான பொருள்களும் வழங்கப்படுகின்றன.

 

கிருமிநீக்கம் செய்ய தீயணைப்பு வாகனங்கள் பயன்பாடு: நகரின் பிரதான சாலைகள், பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், நிறுவனங்கள், மருத்துவமனை வளாகங்கள் போன்ற பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்க நகரின் தீயணைப்புத் துறையின் பெரிய வாகனங்களும், நகரில் வார்டு தெருக்களில் கிருமிநீக்கம் செய்ய சிறிய தீயணைப்பு வாகனங்களும் பயன்படுத்தப் படுகின்றன.

 

நிகாம் சுகாதார அலுவலர்கள் அரசு அலுவலகங்களில் கிருமிநீக்கம் செய்கின்றனர்.

Description: https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image007X3W4.jpg

 

கோவிட் - 19 உதவி மையங்கள் நகர அளவில் செயல்பட உருவாக்கப்பட்டுள்ளது. போர்க்கால ஏற்பாட்டு அறை அதிகாரிகளால் இது கண்காணிக்கப்படுகிறது.

கண்காணிப்புத் தொழில்நுட்பங்கள்  கிருமிநீக்கம் மற்றும் தூய்மைப் பணிகள் ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தின் உதவியுடன், அப்போதைய நிலைமை குறித்து கண்காணிக்கப்படுகின்றன.

தனிமைப்படுத்தல் மையங்கள் ஏற்பாடு செய்தல்- தனிமைப்படுத்தல் வளாகங்களை உருவாக்க ஹோட்டல்கள் மற்றும் இதர தனியார் வளாகங்கள் ஒப்படைக்கப் பட்டுள்ளன.

ஐ.சி.சி.சி. - அபய் கமாண்ட் மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை நகரக் காவல் மற்றும் போக்குவரத்துத் துறைகள் பயன்படுத்தி வருகின்றன.

புலம்பெயர்ந்தோர் நகர்வு: வெளி மாநிலங்களுக்கு, வெளி நகரங்களுக்குச் செல்வதற்கு RAJ COP APP மூலம் இ-பாஸ்கள் வழங்கப்படுகின்றன.

 



(Release ID: 1626445) Visitor Counter : 352