சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

கைவினைப்பொருள்கள், பாரம்பரியக் கலைப்பொருள்களுக்கான “ஹுனார் ஹாட்” கண்காட்சிசெப்டம்பர் 2020 முதல் துவங்கும்; “உள்ளூரிலிருந்துஉலகிற்கு” என்பது கண்காட்சிக்கான கருப்பொருள்.

Posted On: 23 MAY 2020 11:00AM by PIB Chennai

 

கைவினைப் பொருள்கள், பாரம்பரியக் கலைப்பொருள்களுக்கான “ஹுனார் ஹாட்”,  நாடு முழுவதிலும் உள்ள கலைஞர்களும், கைவினைஞர்களும் தங்களது திறமைகளை, சக்திகளைப் பரிமாறிக்கொள்ளும் ஒரு தளமாக உள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களாக இது நடைபெறவில்லை. “உள்ளூரிலிருந்து உலகிற்கு என்ற கருப்பொருளுடன் இந்தக் கண்காட்சி 5 மாதங்களுக்குப் பிறகு செப்டம்பர் 2020 இல் துவங்கவுள்ளது.

 

கடந்த ஐந்து ஆண்டுகளில், ஹுனார் ஹாட், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியக் கலைஞர்கள், கைவினைஞர்கள் சமையற் கலைஞர்கள் மற்றும் இவற்றுடன் தொடர்புடைய இதர மக்களுக்கும் வேலைகளையும், வேலைவாய்ப்புகளையும் வழங்கியுள்ளது என்றும், இது மக்களிடையே மிகவும் பிரபலமடைந்து விட்டதாகவும் மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி ன்று கூறினார். நாட்டின் தொலைதூரப் பகுதிகளிலுள்ள சிறந்த கலைஞர்கள் கைவினைஞர்கள், தங்களுடைய கைவினை, கலைப்பொருள்களை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது ஹுனார் ஹாட்.

 

 

“ஹுனார் ஹாட் கலை, கைவினைப்பொருள்களைக் காட்சிப்படுத்துவதற்கான ஒரு தளம். மக்களின் கனவுகளை சிறகடித்து பறக்கச் செய்வதற்கும் ஹுனார் ஹாட் உதவுகிறது. இது, நாட்டின் பன்முகத்தன்மையை புறந்தள்ளி விடமுடியாமல் செய்கின்ற ஒரு இடம். கைவினைப்பொருள்கள் மட்டுமல்லாமல் இந்தியாவின் பலவகையான உணவுப் பொருள்களையும் இது காட்சிப்படுத்துகிறது. ஒரே நேரத்தில் இட்லி, தோசை, சோலே பட்டரே, தால் – பாட், காமன் காண்ட்வி… இன்னும் என்னவெல்லாம் உண்டு! அவற்றையெல்லாம் உண்டு மகிழலாம். பீகாரின் லிட்டி சோக்கா உணவு வகையை நான் ரசித்து சாப்பிட்டேன். நாடு முழுவதும் இதுபோன்ற கண்காட்சிகள் நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவைத் தெரிந்து கொள்வதற்கும், இந்தியாவை அனுபவிப்பதற்கும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஒருவர் செல்ல வேண்டும். இதன் மூலம், நாட்டின் கலை, கலாச்சாரப் பரப்பின் ஒரு பகுதியாக நீங்கள் இருப்பதோடு கைவினைஞர்கள், கலைஞர்கள் குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்திற்கும், வளத்திற்கும் நீங்கள் பங்களிக்க முடியும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியதை நினைவு கூ வேண்டும்.

 

நாடு முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான நிபுணத்துவம் வாய்ந்த கலைஞர்களும் கைவினைஞர்களும் ஹுனார் ஹாட் மீண்டும் நடைபெறப் போகிறது என்பது குறித்து மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்துள்ளனர் என்று திரு.நக்வி கூறினார்.

 

 


(Release ID: 1626341) Visitor Counter : 296