விவசாயத்துறை அமைச்சகம்

கோடைப் பருவத்தில் கடந்த ஆண்டைவிட இப்போது அதிக அளவு சாகுபடிப் பணிகள், முடக்கநிலை காலத்தில் கொள்முதலும் அதிகரிப்பு

Posted On: 22 MAY 2020 6:47PM by PIB Chennai

கோடைப் பருவ பயிர்களுக்கான விதைப்புச் செயல்பாடுகள்:

கோடைப் பருவப் பயிர்களுக்கான விதைப்புப் பணிகள் நடைபெறும் பகுதிகள் பின்வருமாறு உள்ளன:

  • நெல் : கோடைப் பருவ சாகுபடிக்கு 34.97 லட்சம் ஹெக்டரில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே பருவத்தில் இது 25.29 லட்சம் ஹெக்டராக இருந்தது.
  • பருப்பு வகைகள்: சுமார் 12.82 லட்சம் ஹெக்டரில் பருப்பு வகைகளின் சாகுபடி பணிகள் தொடங்கியுள்ளன. கடந்த ஆண்டு இதே பருவத்தில் இது 9.67 லட்சம் ஹெக்டராக இருந்தது.
  • சிறு தானியங்கள்: சுமார் 10.28 லட்சம் ஹெக்டேரில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே பருவத்தில் இது 7.30 லட்சம் ஹெக்டேராக இருந்தது.
  • எண்ணெய் வித்துகள் : சுமார் 9.28 லட்சம் ஹெக்டேரில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே பருவத்தில் இது 7.34 லட்சம் ஹெக்டேராக இருந்தது.

 

பருப்புகள் , எண்ணெய் வித்துகள் கொள்முதல்:

5.89 லட்சம் மெட்ரிக் டன் கொண்டைக் கடலை,  4.97 லட்சம் மெட்ரிக் டன் கடுகு, 4.99 லட்சம் மெட்ரிக் டன் துவரை ஆகியவை முடக்கநிலை காலத்தில் நாபெட் மூலம் கொள்முதல் செய்யப் பட்டுள்ளன.

 

கோதுமை கொள்முதல்:

2020-21க்கான ரபி மார்க்கெட்டிங் பருவத்தில்  மொத்தம் 337.48 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை இந்திய உணவுப் பாதுகாப்புக் கழகத்துக்கு வந்ததில், 326.96 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு கொள்முதல் செய்யப்பட்டது.

பிரதமரின் - கிசான் திட்டம்:

கோவிட்-19 பாதிப்பின் தொடர்ச்சியாக, முடக்கநிலை காலத்தில் விவசாயிகளுக்கு உதவிடவும், கள அளவில் விவசாயப் பணிகளுக்கு உதவிடவும், வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலன் துறை சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் முடக்கநிலை காலத்தில் 24.3.2020இல் இருந்து இதுவரையில் 9.55 கோடி விவசாயக் குடும்பங்கள் பயன் பெற்றுள்ளன. இதுவரையில் ரூ.19,200.77 கோடி தொகை வழங்கப்பட்டுள்ளது.

 

*****



(Release ID: 1626216) Visitor Counter : 190