நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

மத்திய சேமிப்புக் கழகம் முன்னெப்போதும் இல்லாத அளவில் சுமார் ரூ.1710 கோடிக்கு அதிக விற்பனையை எட்டியது, மத்திய அமைச்சர் திரு. ராம் விலாஸ் பாஸ்வானிடம் இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.35.77 கோடி வழங்கியது.

Posted On: 22 MAY 2020 5:45PM by PIB Chennai

மத்திய உணவுக்கிடங்குக் கழகம் (Central Warehouse Corporation) 2019-20ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1710 கோடிக்கு அதிக அளவில் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. அதன் மேலாண்மை இயக்குநர் திரு. அருண்குமார் ஶ்ரீவஸ்தவா, ரூ.35.77 கோடிக்கான ஈவுத்தொகை காசோலையை, உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலர் திரு. சுதன்சு பாண்டே, அமைச்சகம் மற்றும் சேமிப்புக் கழகத்தின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில், மத்திய உணவு, நுகர்வோர் நலம், பொது விநியோகத் துறை அமைச்சர் திரு. ராம் விலாஸ் பாஸ்வானிடம் இன்று வழங்கினார். உணவு சேமிப்புக் கழகத்தின் இந்தச் சிறப்பான சாதனையை திரு பாஸ்வான் பாராட்டினார்.

மத்திய உணவுக்கிடங்குக் 2019-20-ஆம் ஆண்டுக்கான இடைக்கால ஈவுத்தொகையாக அதன் பெய்ட் அப் மூலதனத்தில் 95.33 சதவீதத்தை அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 72.20 சதவீதமாக இருந்தது. மொத்த ஈவுத்தொகை ரூ.64.98 கோடியில்,  இந்திய அரசு 55 சதவீதப் பங்குகளை வைத்துள்ளதால், அதன் பங்கு ரூ.35.77 கோடியாகும். 2019-20-ஆம் ஆண்டுக்கான இறுதி ஈவுத்தொகை , பங்குதாரர்களின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும்.

 

Description: Image



(Release ID: 1626202) Visitor Counter : 169