ரெயில்வே அமைச்சகம்

நாடு முழுக்க ஏமாற்று வேலையில் ஈடுபடும் இடைத்தரகர்களைக் கண்டறியும் முயற்சிகளைத் தொடங்கியது ஆர்.பி.எப்.

Posted On: 21 MAY 2020 7:38PM by PIB Chennai

இந்திய ரயில்வே நிர்வாகம் 2020 மே 12 ஆம் தேதி 15 ஜோடி ஏ.சி. சிறப்பு ரயில் சேவைகளைத் தொடங்கியிருப்பதுடன், 2020 ஜூன் 1 முதல் கூடுதலாக 100 ஜோடி ரயில் சேவைகளை இயக்கப் போவதாகவும் அறிவித்துள்ள நிலையில், நிறைய தனிப்பட்ட ஐ.டி.கள் மூலம் இ-டிக்கெட்கள் பதிவு செய்து சிறப்பு ரயில்களில் படுக்கை வசதிகளை இடைத்தரகர்கள் பிடித்து வைத்துக் கொள்வதாக நிறைய புகார்கள் வந்துள்ளன. 100 ஜோடி ரயில்களுக்கான முன்பதிவு  21.05.2020ல் தொடங்கியதும், இந்த இடைத்தரகு செயல்பாடுகள் அதிகரிக்கும் என்றும், அதனால் சாமானிய மக்களுக்கு உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட் கிடைக்காமல் போகும் என்றும் அஞ்சப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு, இதுபோன்ற இடைத்தரகு வேலைகளைக் கண்டறிய நாடு முழுக்க ஆர்.பி.எப். முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. புலனாய்வு அம்சத்துடன் இணைத்து PRABAL செயல்முறை மூலம் PRS தகவல்களை பகுப்பாய்வு செய்து இந்த இடைத்தரகர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கை 20.05.2020ல் தொடங்கப்பட்டது.உம்பன் புயலால் நாட்டின் கிழக்குப் பகுதி பாதிக்கப்பட்டுள்ள நிலைிலும், 14 இடைத்தரகு மோசடியாளர்களை ஆர்.பி.எப். கைது செய்துள்ளது. அதில் 8 பேர் ஐ.ஆர்.சி.டி.சி. ஏஜென்ட்கள். அவர்களிடம் இருந்து ரூ.6,36,727 (ஆறு லட்சத்து 36 ஆயிரத்து ஏழுநூற்றி இருபத்தி ஏழு ரூபாய்) மதிப்புள்ள, இனி வரும் நாட்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட்கள் கைப்பற்றப்பட்டன.

ஐ.ஆர்.சி.டி.சி. ஏஜென்ட்கள் தங்களுடைய தனிப்பட்ட ஐ.டி.களைப் பயன்படுத்தி டிக்கெட்களைப் பதிவு செய்து, அங்கீகாரம் இல்லாமல் கூடுதல் விலைக்கு விற்று வந்துள்ளனர். அவர்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை தொடங்கப் பட்டுள்ளது. ஒரு மோசடி இடைத்தரகர் சூப்பர் தட்கல் புரோ என்ற தானே நிரப்பிக் கொள்ளும் மென்பொருளைப் பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

*****



(Release ID: 1626025) Visitor Counter : 190