மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

ஜூலை 2020 செமஸ்டருக்கான 82 இளநிலை மற்றும் 42 முதுநிலை பொறியியல் அல்லாத திறந்தநிலை ஆன்லைன் படிப்புகளை சுவயம் தளம் வழங்குகிறது- திரு. ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’

Posted On: 21 MAY 2020 5:53PM by PIB Chennai

பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்கள் சுவயம் படிப்புகளை மேற்கொள்ளலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ கூறியுள்ளார். பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆன்லைன் கற்றல் படிப்புகளுக்கான கிரெடிட் வரையறை குறித்த தற்போதைய ஒழுங்குமுறைகளின்படி, இந்தப் படிப்புகளை நிறைவு செய்வதன் மூலம் தரக் கிரெடிட்களைப் பெற முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மானியக்குழு , பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், கல்லூரிகளின் முதல்வர்களுடன் 82 இளநிலை மற்றும் 42 முதுநிலை பொறியில் அல்லாத திறந்தநிலை ஆன்லைன் படிப்புகளுக்கான பட்டியலை பகிர்ந்து கொண்டுள்ளதாக திரு. பொக்ரியால் தெரிவித்தார். சுவயம் தளத்தில் இவை 2020 ஜூலை செமஸ்டருக்காக வழங்கப்பட்டுள்ளன (www.swayam.gov.in).

உயிரி வேதியல், உயிரி தொழில்நுட்பம், உயிரியல் அறிவியல் மற்றும் உயிரி பொறியில், கல்வி, சட்டம், கணினி அறிவியல், பொறியியல், வணிகவியல், மேலாண்மை, மருந்தியல், கணிதம், வரலாறு, ஹிந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட பாடங்கள் கற்பிக்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

தற்போதைய கொவிட்-19 சூழலில், மாணவர்கள், ஆசிரியர்கள், வாழ்நாள் முழுவதும் கற்பவர்கள், மூத்த குடிமக்கள், இல்லத்தரசிகள் ஆகியோர் சுவயம் வகுப்புகளில் சேர்ந்து, பயனடைந்து , கற்றல் எல்லையை விரிவுபடுத்திக்கொள்ளுமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

*****



(Release ID: 1626021) Visitor Counter : 156