மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் இணைய இந்தி முதுநிலைப் படிப்பை மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சர் அறிமுகப்படுத்தினார்

Posted On: 20 MAY 2020 8:10PM by PIB Chennai

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் இணைய இந்தி முதுநிலைப் படிப்பை (எம். ) முகநூல் நேரலை நிகழ்ச்சியில் மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சர், திரு. ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், இது நமது "பதே இந்தியா ஆன்லைன்" (இணையத்தில் படி இந்தியா) முயற்சியை வலுப்படுத்துமென்று கூறியதோடு இணையவழிக் கல்வியை ஊக்கப்படுத்துவதில் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பங்கை பாராட்டினார். இந்தியாவில் மட்டுமில்லாது, மொரீஷியஸ், ஃபிஜி மற்றும் சுரிநாம் ஆகிய நடுகளிலும் இந்தி முக்கியப் பங்காற்றி வருவதைக் குறிப்பிட்டார்.

 

தேசிய டிஜிட்டல் நூலகம், ஸ்வயம், ஸ்வயம் பிரபா, திக்ஷா மற்றும் இதர தளங்கள் நாடெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான கற்போருக்கு டிஜிட்டல் கல்வியை வழங்கி வருவதாகக் கூறிய அமைச்சர், இந்த திசையில் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் முயற்சி இம்மாதிரியானத் திட்டங்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்றார். இதுவரை அணுகப்படாதவர்களுக்கு எட்டக்கூடிய வகையில் கல்வியை கொண்டு செல்வதற்கு இணையவழிக் கல்வியை ஊக்குவிக்கும் அரசின் உறுதியைப் பற்றி பேசிய அவர், இதில் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பங்கை புறம்தள்ள முடியாது என்று கூறினார்.

 

தன்னுடைய www.iop.ignouonline.ac.in என்னும் இணையதளத்தில் இணையவழிப் படிப்புகளை இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வழங்குகிறது. காணொளி மற்றும் ஒலி வடிவில் வகுப்புகள், பாடங்கள் ஆகியவற்றை இந்த இணையத் திட்டம் உள்ளடக்கி உள்ளது. இவை அனைத்தும் இணையதளத்தில் ஒரே சொடுக்கில் கிடைக்கிறது.

 

***



(Release ID: 1625767) Visitor Counter : 171