பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
கருவுற்ற பெண் அலுவலர்களும், பணியாளர்களும் பணிக்கு வருவதிலிருந்து மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை விலக்கு அளித்துள்ளது
प्रविष्टि तिथि:
20 MAY 2020 8:16PM by PIB Chennai
மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, கருவுற்ற பெண் அலுவலர்களும், பணியாளர்களும் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு அளித்துள்ளது. வடகிழக்கு மண்டல மேம்பாடு, பிரதமர் அலுவலகம் பணியாளர், பொதுத்துறை பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம் அணுசக்தி மற்றும் விண்வெளி துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று இதைத் தெரிவித்தார். இதுதொடர்பாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது என்றும், இதைத் தொடர்ந்து பல்வேறு அமைச்சகங்களும் துறைகளும் மாநில /யூனியன் பிரதேச அரசுகளும் இதைப் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
ஏற்கனவே பேறுகால விடுமுறையில் இல்லாத கருவுற்ற பெண் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப் படுவதாகவும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். மாற்றுத்திறனாளிகளுக்கும் இதேபோன்று அலுவலகம் வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
(रिलीज़ आईडी: 1625739)
आगंतुक पटल : 205