மத்திய பணியாளர் தேர்வாணையம்
ஜூன் 5-ம் தேதி கூட்டத்திற்குப் பின்னர் புதிய தேர்வுகள் பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிடும்
प्रविष्टि तिथि:
20 MAY 2020 6:49PM by PIB Chennai
கொவிட்-19 பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள நாடு தழுவிய மூன்றாவது கட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்குப் பின்பு நிலவும் சூழல் குறித்து ஆய்வு செய்வதற்காக, மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் (யுபிஎஸ்சி) இன்று சிறப்பு கூட்டம் ஒன்றை நடத்தியது. பல்வேறு கட்டுப்பாடுகள் நீடிப்பது குறித்து கவனத்தில் கொண்ட ஆணையம், தற்போதைய சூழலில் தேர்வுகள் மற்றும் நேர்காணல்களை நடத்துவது இயலாத காரியம் என்ற முடிவுக்கு வந்துள்ளது.
இருப்பினும், மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள முன்னேற்றமான தளர்வுகளைக் கருத்தில் கொண்டு, நான்காம் கட்ட ஊரடங்கிற்குப் பின்னர், மீண்டும் ஒரு ஆய்வுக் கூட்டத்தை நடத்துவது என ஆணையம் முடிவெடுத்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக தள்ளிவைக்கப்பட்ட பல்வேறு தேர்வுகள், நேர்காணல்கள் குறித்து தேர்வர்களுக்கு தெளிவான அறிவிப்பை வெளியிடுவதைக் கருத்தில் கொண்டு, வரும் ஜூன் மாதம் 5-ம் தேதி நடைபெறவுள்ள அடுத்த கூட்டத்தில், மாற்றியமைக்கப்பட்ட தேர்வுகள் அட்டவணையை ஆணையம் வெளியிடும். ஜூன் 5-ம் தேதி நடைபெறும் ஆணையத்தின் கூட்டத்திற்குப் பின்னர், விரிவான புதிய தேர்வு அட்டவணை யுபிஎஸ்சி வலைதளத்தில் வெளியிடப்படும்.
*****
(रिलीज़ आईडी: 1625723)
आगंतुक पटल : 276