பாதுகாப்பு அமைச்சகம்

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை ஊக்குவிக்க 26 தளவாடப் பொருட்களை உள்நாட்டு நிறுவனங்களிடம் கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

प्रविष्टि तिथि: 20 MAY 2020 7:38PM by PIB Chennai

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை ஊக்குவிக்கவும், இந்தியாவில் பொருட்கள் மற்றும் சேவை உற்பத்தியை மேம்படுத்தவும் பொது கொள்முதல் (‘‘மேக் இன் இந்தியா திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்கும்) உத்தரவு 2017ஐ (15.06.2017ல் வெளியிடப்பட்ட தொழில் கொள்கை மற்றும் மேப்பாட்டு துறையின் (DIPP) அறிவிப்பு எண்.P-45021/2/2017-B.E.-II, 29/05/2019ம் தேதிப்படி திருத்தப்பட்டது) மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவின் கீழ், பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவத் தளவாட தயாரிப்பு துறை (DDP), PPP-MII 2017 அறிவிப்பின் படி உள்நாட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் 127 தளவாடப் பொருட்களை வாங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த 127 தளவாடப் பொருட்களில் 26 பொருட்கள், ஏற்கனவே பொது கொள்முதல் பிரிவு3(a)ன் கீழ் (மேக் இன் இந்தியா திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்கும்) 2017 உத்தரவில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், கொள்முதல் செய்யும் நிறுவனங்கள், தளவாடப் பொருட்களை உள்ளூர் நிறுவனங்களிடம் வாங்கும் விலைக்கு ஏதுவாக கொள்முதல் செய்ய வேண்டும்.    


(रिलीज़ आईडी: 1625702) आगंतुक पटल : 300
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , Telugu , English , Urdu , हिन्दी , Punjabi