பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

இந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் வட்டித் தள்ளுபடிக்கு அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 20 MAY 2020 2:17PM by PIB Chennai

இந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் நிறுவனம் மத்திய அரசிடமிருந்து பெற்றிருந்த கடன் தொகைக்கான 7.59 கோடி ரூபாய் வட்டியை தள்ளுபடி செய்வதற்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகார அமைச்சரவைக் குழு, முடிந்த காலத்தையும் உட்படுத்துகிற (Post Facto) ஒப்புதல் அளித்துள்ளது.. இது 31 மார்ச் 2005 தேதியின் படியான தொகையாகும். 31 மார்ச் 2005 வரையிலான காலத்திற்கான அபராத வட்டி மற்றும் வட்டி மீதான வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, முன்னதாக, மார்ச் 2006 இல், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இந்தத் தள்ளுபடிக்கு ஹிந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல் நிறுவனத்திற்கான புனரமைப்புத் திட்டத்தின் படி ஒப்புதல் அளித்திருந்தது.

இது கிட்டத்தட்ட பத்தாண்டு காலமாக உள்ளது என்பதால் அரசு கணக்குப் புத்தகங்களிலும், HOCL கணக்குப் புத்தகங்களிலும் வட்டித் தொகையான 7.59 கோடி ரூபாய் ஏற்கனவே தள்ளுபடி (write off) செய்யப்பட்டிருந்தது. இதன் மீதான வட்டி மிகக் கணிசமான அளவிலானதல்ல. எனவே 31 மார்ச் 2005 தேதியின்படி அரசுக் கடன்கள் மீதான 7.59 கோடி ரூபாய் வட்டித் தொகையை தள்ளுபடி செய்ததை முறைப்படுத்துவது உகந்ததாக இருக்கும். இது தொடர்பாக நிலுவையிலுள்ள CAG சிஏஜி தணிக்கை குறிப்புக்கு தீர்வு காண்பதற்கும் இந்த ஒப்புதல், HOCL நிறுவனத்திற்கு உதவியாக இருக்கும்.

******


(रिलीज़ आईडी: 1625662) आगंतुक पटल : 221
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , English , Urdu , हिन्दी , Manipuri , Bengali , Punjabi , Telugu , Malayalam