பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரிச் சுரங்கங்களின் ஏலம்; நிலக்கரி/ பழுப்பு நிலக்கரி நிலத் தொகுதிகளின் விற்பனை ஆகியவற்றை, வருவாய்ப் பங்கீட்டு அடிப்படையில் மற்றும் உலோக நிலக்கரி காலத் தொடர்பு முறையைப் பின்பற்றுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
20 MAY 2020 2:12PM by PIB Chennai
நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரிச் சுரங்கங்களின் ஏலம்; நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி நிலத்தொகுதிகளின் விற்பனை ஆகியவற்றை வருவாய்ப் பங்கீடு அடிப்படை மற்றும் உலோக நிலக்கரித் தொடர்புக் காலத்தை அதிகரிப்பது என்ற முறையில் ஏலம் விடுவதற்கான முறையைப் பின்பற்ற, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த முறையின் மூலம் , ஏலத்திற்கான அம்சம் வருவாய்ப் பங்கீடு என்பதாக இருக்கும். ஏலம் எடுப்பவர்கள் அரசுக்கு அளிக்கக்கூடிய வருவாய்ப் பங்கு சதவிகிதத்தை ஏலத்தில் குறிப்பிட வேண்டும். வருவாய்ப் பங்கீடு குறைந்தபட்ச விலை 4 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 சதவீதம் வரை ஏலம் கேட்பவர்கள் 0.5 சதவிகித மடங்கில் ஏலம் கேட்கலாம். 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக ஏலம் கேட்பவர்கள் 0.25 சதவிகித மடங்கில் கேட்கலாம். இந்த முறைப்படி கேட்கப்படும் ஏலங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விற்பனையிலும், சுரங்கத்திலிருந்து கிடைக்கும் நிலக்கரியைப் பயன்படுத்துவதற்கும் எந்தவிதமானக் கட்டுப்பாடுகளும் கிடையாது.
கிடைக்கும் நிலக்கரியை விரைவில், அதிகபட்சமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், இந்த ஏலமுறை அமைக்கப்பட்டுள்ளது. போதுமான அளவு போட்டியின் மூலம், நிலக்கரி நிலத்தொகுதிகளின் சந்தை விலைகளைக் கண்டறியவும், நிலக்கரி நிலத்தொகுதிகளை விரைவாக மேம்படுத்தவும், இந்த ஏலமுறை உதவும். நிலக்கரி உள்ள பகுதிகளில் அதிக அளவில் முதலீடு செய்வதால் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு, குறிப்பாக சுரங்கத் துறையில், உருவாகும். இந்த மண்டலங்களில் பொருளாதார வளர்ச்சி மீதான தாக்கமும் இருக்கும்
******
(Release ID: 1625661)
Visitor Counter : 292