மத்திய அமைச்சரவை

``உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை (FME) முறைப்படுத்தும் திட்டத்துக்கு'' அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 20 MAY 2020 2:27PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அகில இந்திய அளவில் அமைப்புசாரா துறைக்கு மத்திய அரசால் முன்னெடுக்கப்படும் புதிய திட்டமாக ரூ.10,000 கோடி திட்ட மதிப்பீட்டில்,  ``உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை (FME) முறைப்படுத்தும் திட்டத்துக்கு'' ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கான செலவுகளை மத்திய அரசும் மாநில அரசுகளும் 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ளும்.

திட்டத்தின் விவரங்கள் :

நோக்கங்கள்:

•     உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கு கடன் கிடைக்கும் வசதியை அதிகரிக்கச் செய்தல்.

•     இலக்கு நிறுவனங்களின் வருவாயைப் பெருக்குதல்.

•     உணவின் தரம் மற்றும் பாதுகாப்புத் தரநிலைகள் விதிகளின் ஒத்திசைவு நிலையை மேம்படுத்துதல்.

•     ஆதரவு முறைமைகளின் திறன்களை பலப்படுத்துதல்.

•     அமைப்புசாரா துறையில் இருந்து முறைசார்ந்த தொழில் துறையாக மாற்றுதல்.

•     பெண் தொழில்முனைவோர் மற்றும் முன்னேற விரும்பும் மாவட்டங்களுக்கு சிறப்புக் கவனம்.

•     கழிவுகளை ஆதாயமாக்கும் செயல்பாடுகளை ஊக்குவித்தல்.

•     மலைப் பகுதி மாவட்டங்களில் சிறிய வனப்பொருள்கள் மீது கவனம் செலுத்துதல்.

சிறப்பம்சங்கள்:

•     மத்திய அரசால் முன்னெடுக்கப்படும் திட்டம். மத்திய அரசும் மாநில அரசுகளும் 60:40 என்ற விகிதத்தில் செலவுகளைப் பகிர்ந்து கொள்ளும்.

•     கடனுடன் இணைந்த மானியம் மூலம் 2,00,000 குறு தொழில் நிறுவனங்களுக்கு உதவி கிடைக்கும்.

•     இந்தத் திட்டம் 2020-2021 முதல் 2024-2025 வரையில் 5 ஆண்டு காலத்துக்கு அமல் படுத்தப்படும்.

•     அழுகும் பொருள்கள் மீது கவனம் செலுத்தப்படும்.

தனிப்பட்ட குறு தொழில் நிறுவனங்களுக்கு உதவி:

•     குறு தொழில் நிறுவனங்களுக்கு, தகுதியுள்ள திட்டச் செலவில் 35 சதவீதம் அளவுக்கு  கடனுடன் இணைந்த மானியம் அளிக்கப்படும். ரூ.10 லட்சம் வரையில் இதற்கு வரம்பு இருக்கும்.

•     பயனாளி குறைந்தபட்சம் 10 சதவீத பங்களிப்பு செய்யவேண்டும், மீதி கடனாக வழங்கப்படும்.

•     பணியிடத் தொழில் திறன் பயிற்சி, விரிவான திட்ட அறிக்கை மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு வழிகாட்டுதல் உதவி.

விவசாய உற்பத்தி நிறுவனங்கள் / சுய உதவிக் குழுக்கள் / கூட்டுறவுகளுக்கு உதவி :

•     சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு செயல்பாட்டு மூலதனம் மற்றும் சிறு உபகரணங்களுக்கு அடிப்படை முதலீடு.

•     பின்னோக்கிய / முன்னெடுத்து செல்லும் தொடர்புகளுக்கு, பொது கட்டமைப்பு, பேக்கேஜிங், மார்க்கெட்டிங், விளம்பரப்படுத்தலுக்கு மானியம்.

•     தொழில்திறன் பயிற்சி, வழிநடத்தும் உதவி.

•     கடனுடன் இணைந்த முதலீட்டு மானியம்.

அமலாக்க கால அட்டவணை:

•     இந்தியா முழுக்க இத் திட்டம் தொடங்கப்படும்.

•     2,00,000 தொழில் நிறுவனங்களுக்கு கடனுடன் இணைந்த மானியம் அளிக்கப்படும். சுய உதவிக் குழுக்களுக்கு, உறுப்பினர்களுக்கு செயல்பாட்டு மூலதனம் மற்றும் சிறு உபகரணங்களுக்கு, அடிப்படை முதலீடாக (தலா ரூ.4 லட்சம்) வழங்கப்படும்.

•     பின்னோக்கிய / முன்னெடுத்து செல்லும் தொடர்புகளுக்கு, பொது கட்டமைப்பு, பேக்கேஜிங், மார்க்கெட்டிங், விளம்பரப்படுத்தலுக்கு Farmer Producer Organization Scheme. FPO -களுக்கு மானியம் அளிக்கப்படும்.

நிர்வாக மற்றும் அமலாக்க நடைமுறைகள்

•     உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் தலைமையில், அமைச்சகங்களுக்கு இடையிலான அதிகாரம் அளிக்கப்பட்ட கமிட்டி மூலம் மத்திய அரசால் இத் திட்ட அமலாக்கம் கண்காணிக்கப்படும்.

•     தலைமைச் செயலாளர் தலைமையிலான மாநில / யூனியன் பிரதேச கமிட்டி (எஸ்.எல்.சி.) இதைக் கண்காணித்து, குறு தொழில்களை விரிவாகம் செய்ய அனுமதித்தல் / பரிந்துரைகளைச் செய்வதுடன், சுய உதவிக் குழுக்கள் / விவசாய உற்பத்தி நிறுவனங்கள் (Farmer Producer Organization –FPO) / கூட்டுறவுகள் புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்க பரிந்துரை செய்யும்.

•     திட்ட அமலாக்கத்திற்கு பல்வேறு செயல்பாடுகளைக் கொண்ட வருடாந்திர செயல் திட்டங்களை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் தயாரிக்கும். அவற்றுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும்.

•     இந்தத் திட்டத்தில் மூன்றாம் தரப்பாரின் மதிப்பீட்டு மற்றும் மத்திய கால ஆய்வு நடைமுறை உருவாக்கப்படும்.

மாநில / யூனியன் பிரதேச முன்னோடித் துறையும், முகமையும்

இந்தத் திட்டத்தை அமல் செய்வதற்கு முன்னோடித் துறை மற்றும் ஏஜென்சியை மாநில / யூனியன் பிரதேச அரசு அறிவிக்கை செய்யும்.

•     மாநில / யூனியன் பிரதேச அளவில் திட்டத்தை அமல் செய்வதற்கு மாநில / யூனியன் பிரதேச முன்னோடி ஏஜென்சி (எஸ்.என்.ஏ.) பொறுப்பேற்கும். மாநில / யூனியன் பிரதேச  அளவில் திட்டத்தின் தரநிலையை உயர்த்துதல், தொகுப்பாக மேம்பாட்டுத் திட்டம் போன்றவை உள்ளிட்டவற்றில் இந்த முகமை கவனம் செலுத்தும். மாவட்ட / வட்டார அளவில் ஆதார வளக் குழுக்களின் பணியை மேற்பார்வை செய்து, நிறுவனங்கள் மற்றும் குழுக்களுக்கு உதவி செய்வதும் இதில் அடங்கும்.

 

***************



(Release ID: 1625375) Visitor Counter : 373