மத்திய அமைச்சரவை

வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டுக்கடன் நிறுவனங்களின் பணப்புழக்க சிக்கலைக் களைய சிறப்பு நிதித் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது

Posted On: 20 MAY 2020 2:19PM by PIB Chennai

வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டுக்கடன் நிறுவனங்களின் பணப்புழக்க நிலைமையை மேம்படுத்துவதற்காக நிதி அமைச்சகம் தயாரித்த சிறப்பு நிதி ஓட்டத் திட்டத்துக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

நிதித் தாக்கம்:

 

அரசின் நேரடி நிதித் தாக்கம் என்பது ரூ 5 கோடி ஆகும். சிறப்பு முகமைக்கு ஈவுப் பங்களிப்பாக இது இருக்கலாம். தொடர்புடைய உத்தரவாதத்தை உயிர்ப்பிக்கும் வரை, இதைத் தாண்டி வேறு எந்த நிதித் தாக்கமும் அரசுக்கு இல்லை. ஆனால், அது உயிர்ப்பிக்கப்பட்டு விட்டால், அரசின் உச்சவரம்புக்கு உட்பட்டு, வழுவுதல் தொகைக்கு சமமானதாக அரசின் பொறுப்பு இருக்கும். ரூ 30,000 கோடியாக ஒருங்கிணைந்த உத்தரவாதத்தின் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தேவைக்கேற்ப இது அதிகரிக்கப்படலாம்.

 

திட்டத்தின் தகவல்கள்:

 

வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டுக்கடன் நிறுவனங்களின் பணப்புழக்கச் சிக்கலைக் களைய சிறப்பு நிதி ஓட்டத் திட்டத்தின் மூலம் ஒரு கட்டமைப்பை அரசு முன்மொழிந்துள்ளது. அழுத்தத்தில் இருக்கும் சொத்து நிதியை நிர்வகிக்க ஒரு சிறப்பு முகமை உருவாக்கப்படும். அதன் சிறப்புப் பத்திரங்கள் இந்திய அரசால் உத்தரவாதம் அளிக்கப்பட்டு, இந்திய ரிசர்வ் வங்கியால் மட்டுமே வாங்கப்படும். அவற்றின் விற்பனையில் இருந்து வரும் நிதி, வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டுக்கடன் நிறுவனங்களுக்கு குறுகியக் காலக் கடன் வாங்க சிறப்பு முகமையால் பயன்படுத்தப்படும். இந்தத் திட்டத்தை நிர்வகிக்க இருக்கும் நிதிச் சேவைகள் துறை, விரிவான வழிகாட்டுதல்களை வெளியிடும்.

 

செயல்படுத்துதல் அட்டவணை:  

 

இந்திய அரசால் உத்தரவாதம் அளிக்கப்பட்டு, இந்திய ரிசர்வ் வங்கியால் மட்டுமே வாங்கப்படும் வட்டியைத் தாங்கி வரும் சிறப்புப் பத்திரங்களை வெளியிடும் அழுத்தத்தில் இருக்கும் சொத்து நிதியை நிர்வகிக்க, சிறப்பு முகமை ஒன்று ஒரு பெரிய பொதுத்துறை வங்கியால் அமைக்கப்படும். தேவைக்கேற்ப ஆனால் மொத்த மதிப்பு ரூ 30,000 கோடியைத் தாண்டாமல், அதே சமயம் தேவைக்கேற்ப நிதியை அதிகப்படுத்திக் கொள்ளும் வகையில் பத்திரங்களை சிறப்பு முகமை வெளியிடும். சிறப்பு முகமையால் வெளியிடப்படும் பத்திரங்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் வாங்கிக் கொள்ளப்பட்டு, அதன் மூலம் வரும் நிதி, தகுதியுள்ள வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டுக்கடன் நிறுவனங்களின் குறுகிய கால, குறைந்தபட்சம் முதலீட்டுத் தரம் உள்ள கடன்களை (3 மாதங்கள் வரை மீதமுள்ள முதிர்வுக் காலம்) வாங்கிக் கொள்ள சிறப்பு முகமையால் பயன்படுத்தப்படும்.

 

***(Release ID: 1625363) Visitor Counter : 284