சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

சுகாதார செயலாளர் கொவிட் -19 நோய் தொற்று அதிகமுள்ள 30 நகராட்சி பகுதிகளுடன் தொடர்பு கொள்கிறார்

Posted On: 16 MAY 2020 6:55PM by PIB Chennai

சுகாதார செயலாளர் எம்.எஸ்.பிரீதி சுதன், மற்றும் சுகாதார அமைச்சகத்தின் சிறப்பு அதிகாரி, திரு. ராஜேஷ் பூஷண் ஆகியோர் சுகாதரத்துறையின் மூத்த அதிகாரிகளுடனும், கொவிட் – 19 நோய் தொற்று அதிகமுள்ள 30 நகராட்சி பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தொடர்பு சுகாதார செயலாளர்களுடனும்,  நகராட்சி ஆணையர்களுடனும், மருத்துவ அதிகாரிகளுடனும் மற்ற உயர் அதிகாரிகளுடனும் ஒரு உயர் மட்ட ஆய்வுக்கூட்டத்தை இன்று நடத்தியது.  

 

இந்த 30 நகராட்சி பகுதிகள் பின்வரும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவை: மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா, பஞ்சாப் மற்றும் ஒடிசா ஆகும்.

 

கொவிட்-19 நோய் தொற்றை நிர்வகிக்க நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எடுத்த நடவடிக்கைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டன. நகர்ப்புற குடியிருப்புகளில் கொவிட்-19 ஐ தடுப்பதற்காக புதிய வழிகாட்டுதல்கள் பகிரப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் சிறப்பம்சங்கள் விவாதிக்கப்பட்டன.

 

இதுவரை மொத்தம் 30,150 பேர் குணமாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 2233 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இது நோயில் இருந்து மீண்டவர்கள் 35.09%. உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை இப்போது 85,940 ஆகும். நேற்று முதல், இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்ட கொவிட்-19 நோய் தொற்றாளர்கள் எண்ணிக்கை 3970 அதிகரித்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கொவிட்-19 தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்த அனைத்து உண்மையான மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களுக்கும் தயவு செய்து https://www.mohfw.gov.in/ and @ MoHFW_INDIA என்ற இணையதளங்களை பார்வையிடவும்.

 

கொவிட்-19 தொடர்பான கேள்விகள் இருந்தால், தயவுசெய்து சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் உதவிமைய எண். : + 91-11-23978046 அல்லது 1075 (கட்டணமில்லாது) ஐ தொடர்பு கொள்ளவும். கொவிட் – 19 தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உதவிமைய எண்களின் பட்டியலும் https://www.mohfw.gov.in/pdf/coronvavirushelplinenumber.pdf என்ற இணையதளத்தில் கிடைக்கிறது.

 

*****


(Release ID: 1624744) Visitor Counter : 189