அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

மனித உடலில் பொருத்தப்படக் கூடிய தாமாகவே சிதைவுறும் அடுத்த தலைமுறை உலோகக் கலவை சர்வதேச உயர்நிலை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்டுள்ளது.

Posted On: 16 MAY 2020 12:02PM by PIB Chennai

தன்னாட்சி அமைப்புகளான, தூள் உலோகவியல் மற்றும் புதிய உலோகங்களுக்கான, சர்வதேச உயர்நிலை ஆராய்ச்சி மையம் மற்றும் அறிவியல் தொழில் நுட்பத் துறையின் கீழியங்கும் திருவனந்தபுரத்திலுள்ள ஸ்ரீ சித்திரத் திருநாள் மருத்துவ அறிவியல் கழகத்தின் விஞ்ஞானிகள் ஆகியோர் இணைந்து, அடுத்த தலைமுறைக்கான இரும்பு மற்றும் மாங்கனீசை அடிப்படையாகக் கொண்ட உலோகக் கலவையைத் தயாரித்திருக்கிறார்கள். தானாகவே சிதைவுறக்கூடிய உலோகப் பொருள்களை மனிதர்களுக்குப் பொருத்துவதற்கு இது பயன்படும்.

 

தற்போது மனித உடலில் நிரந்தரமாகப் பொருத்தப்படும் உலோகப்பொருள்கள் மனித உடலில் நிரந்தரமாக இருந்து உள்ளுக்குள்ளேயே நச்சுத்தன்மை பரவுதல் (systemic toxicity), நீடித்த வீக்கம் (Chronic inflammation), நாளக்குருதி உறைவு (Thrombosis) போன்ற நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இதற்கு, சிறந்த ஒரு மாற்றாக, தானாகவே சிதைவுறும் பொருட்கள் (Fe, Mg, Zn மற்றும் பாலிமர்) உள்ளன. இவை, குணப்படுத்தும் முறையில் பங்கேற்று, மனித உடலில் எந்தவிதத் துகள்களும் தங்காமல், தாமாகவே படிப்படியாக சிதைவுறும் தன்மை கொண்டவை. அதேசமயம் இயந்திர ஒருங்கிணைப்பையும் பராமரிக்கக் கூடியவை.

 



(Release ID: 1624413) Visitor Counter : 151