அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இந்திய தேசிய பொறியியல் கழகம் (INAE) இளம் தொழில்முனைவோர் விருது 2020க்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

प्रविष्टि तिथि: 15 MAY 2020 6:39PM by PIB Chennai

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் (DST) தன்னாட்சி நிறுவனமான குர்கானில் உள்ள இந்திய தேசிய பொறியியல் கழகம் (INAE), இளம் தொழில்முனைவோர் விருது 2020க்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்காக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 2 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசு தனி நபருக்கு அல்லது மூன்று நபர்களுக்கு மிகா தனிநபர்களின் குழுவுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.

 

ஒரு வருடத்தில் இரண்டு வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது இளம் பொறியாளர்களிடையே புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், இளம் தொழில் முனைவோரை அங்கீகரிக்கவும் வழங்கப்படுகிறது. புதிய பொறியியல் கண்டுபிடிப்புகள் அல்லது தயாரிப்புகள் இந்த விருதுக்குத் தகுதி பெறுகின்றன. தொழில்துறையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்ட பொறியியல் கண்டுபிடிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.  மேலும் ஜனவரி 1, 2020 ஆம் தேதி நிலவரப்படி 45 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் பரிசீலிக்கத் தகுதியுடையவர்கள்.

 

வேட்புமனுக்கள் இந்திய தேசிய பொறியியல் கழகம் (INAE) இணையதளத்தில் பெற்றுக் கொள்ளத் தொடங்கப்பட்டுள்ளன, வேட்புமனுக்கள் பெற கடைசி தேதி ஜூன் 30, 2020. ஆர்வமுள்ள போட்டியாளர்கள் www.inae.in என்ற இணைய தளத்தைப் பார்வையிடலாம்.

 

****************


(रिलीज़ आईडी: 1624364) आगंतुक पटल : 244
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi