சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

மாசு வெளிப்பாடு ஒலி அளவு தரநிலைப்படுத்தல் தொடர்பாக மோட்டார் வாகன விதிமுறைகளில் திருத்தம் செய்ய ஆலோசனைகள் வரவேற்பு

Posted On: 15 MAY 2020 4:48PM by PIB Chennai

மாசு வெளிப்பாடு மற்றும் ஒலி அளவு தரநிலைப்படுத்தல் தொடர்பாக மோட்டார் வாகனங்கள் விதிமுறைகளில் திருத்தம் செய்வதற்கான ஆலோசனைகள் அளிக்குமாறு, பொது மக்கள் உள்ளிட்ட, தொடர்புடைய துறையினரிடம் இருந்து சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் ஆலோசனைகளைக் கேட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிக்கை கடந்த 11 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதை பின்வரும் இணையதள சுட்டியில் காணலாம் www.morth.gov.in

மாசு வெளிப்பாடு மற்றும் ஒலி தரநிலைப்படுத்தல் ஒத்திசைவு வரம்பில் சாலையில் பயன்படுத்தும் தகுதிச் சான்றிதழ் படிவம் 22-ல் திருத்தம் செய்வது தொடர்பாக  மே 11 ஆம் தேதியிட்ட வரைவு அறிவிக்கை ஜி எஸ் ஆர் 292 (இ) வெளியிடப்பட்டுள்ளது. உற்பத்தியாளர் அல்லது இறக்குமதி செய்தவர் அல்லது இ-ரிக்சா அல்லது இ-வண்டியாக இருந்தால், பதிவு செய்த இ- ரிக்சா அல்லது இ-வண்டி சங்கத்தின் மூலம் வெளியிடப்பட்ட விதிகளைப் பூர்த்தி செய்வதை அடிப்படையாகக் கொண்டதாக இது உள்ளது. இப்போது இருக்கும் 2 அட்டவணைகள், எளிமையான புரிதலுக்காக ஒரே அட்டவணையாக மாற்றப்பட்டு, அடுத்த நிலைக்கான மாசு வெளிப்பாடு விதிகளை ஒட்டி சில மாசுபாடு குறியீடுகள் சேர்க்கப் பட்டுள்ளன.

இதுதொடர்பான ஆலோசனைகள் அல்லது கருத்துகளை இணைச் செயலாளர், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், போக்குவரத்து பவன், நாடாளுமன்ற சாலை, புதுடெல்லி - 110001 (இமெயில்: jspb-morth[at]gov[dot]in ) என்ற முகவரிக்கு 2020 ஜூன் 10 ஆம் தேதி வரையில் அனுப்பலாம்.



(Release ID: 1624363) Visitor Counter : 160