ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

குவாஹத்தி தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் கோவிட் -19 தொற்றை எதிர்த்து போராட புதுமையான முப்பரிமாண பொருட்களை வடிவமைத்துள்ளது

Posted On: 15 MAY 2020 4:06PM by PIB Chennai

குவாஹத்தியில் உள்ள தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் - என் ஐ இ பி ஆர் , உலகத் தொற்றாகிவிட்ட கோவிட் -19க்கு எதிராகப் போராட இரண்டு புதிய பொருள்களைக் கண்டுபிடித்துள்ளது.


முதலாவது பொருள் முப்பரிமாண அச்சு முறையில் உருவாக்கப்பட்ட, கைதொடாமல் பயன்படுத்தும் பொருளாகும். இதனைக் கொண்டு கையால் தொடாமலேயே கதவுகள், ஜன்னல்கள், மேஜை\அலமாரி டிராயர்கள், குளிர்சாதனப் பெட்டிகளை திறக்கலாம் \ மூடலாம். மேலும் லிப்ட் பொத்தான்கள் , கணினிக் கருவிகளின் பொத்தான்கள், லைட் \ மின்விசிறி பொத்தான்கள் ஆகியவற்றையும் அழுத்தலாம்.


இரண்டாவதாக, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் முப்பரிமாண அச்சு முறையில் தயாரிக்கப்பட்ட நுண்ணுயிரி எதிர்ப்பு முகக் கவசம். வாய் , கண் , மூக்கு மற்றும் இதர உடல் குழிகள் மூலம் வைரஸ்கள் எவ்வாறு பரவுகின்றன என்பதை நன்கு ஆராய்ந்து இது வடிவமைக்கப் பட்டுள்ளது இந்த முகக் கவசம் எளிதில் வடிவமைக்கக் கூடியது: முன் மாதிரிகளை விரைந்து உருவாக்கவும் இதில் வழிவகை செய்யப் பட்டுதுள்ளது.

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/IMG-20200515-WA0025Q5C4.jpg

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/IMG-20200515-WA00245U5E.jpg
 



(Release ID: 1624355) Visitor Counter : 164