ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

இந்திய பொட்டாஷ் நிறுவனம் பொட்டாஷ் முயுரியேட் விலையை டன்னுக்கு ரூ. 17500- ஆகக் குறைத்துள்ளது

Posted On: 15 MAY 2020 4:44PM by PIB Chennai

இந்தியா பொட்டாஷ் நிறுவனம், பொட்டாஷ் முயுரியேட் விலையை டன்னுக்கு ரூ. 19000-த்திலிருந்து ரூ. 17500- ஆக, அதாவது மூட்டை ஒன்றுக்கு ரூ.75 அளவுக்கு குறைக்க முடிவு செய்துள்ளது. பொட்டாசியம் க்ளோரைடு எனவும் அழைக்கப்படும் பொட்டாஷ் முயுரியேட், செடிகளின் வளர்ச்சிக்கும் அதன் தரத்திற்கும் மிகவும் அவசியமானது. புரோடீன்கள், சர்க்கரை உற்பத்தியில் இது முக்கிய பங்கு ஆற்றுகிறது. செடிகளின் ஈரப்பதத்தைப் பாதுகாத்து வறட்சிக்கு எதிராக அவற்றைப் பாதுகாக்கிறது.

இதனை அடுத்து இலைகள் தங்களது வடிவத்தையும் ஆற்றலையும் தக்க  வைத்துக் கொள்வதால் ஒளிச்சேர்க்கைக்கு பெரிதும் உதவியாக உள்ளது.
கடந்த ஓராண்டில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ள நிலையிலும், ஏப்ரல் முதல் தேதியிலிருந்து இயற்கை உற்பத்திப் பொருட்கள் மீதான மானியத்தை அரசு குறைத்துள்ள நிலையிலும், விவசாயிகளின் நலன் கருதி இந்த விலைக்கு குறைப்பு செய்யப் பட்டிருப்பதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
 



(Release ID: 1624354) Visitor Counter : 237