வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
அத்தியாவசிய மருந்துகள், சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் மலிவு விலையில் கிடைப்பதை உறுதி செய்ய ஜி-20 நாடுகளிடம் இந்தியா வலியுறுத்தல்
प्रविष्टि तिथि:
14 MAY 2020 8:23PM by PIB Chennai
அத்தியாவசிய மருந்துகள், சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் மலிவு விலையில் கிடைப்பதை ஜி -20 நாடுகள் உறுதி செய்ய வேண்டுமென இந்தியா வலியுறுத்தி உள்ளது. வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற 2வது ஜி-20 மெய்நிகர் வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், கொரோனா தொற்றுநோயால் உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் துயரத்தை தீர்க்க உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறு ஜி20 உறுப்பு நாடுகளை கேட்டுக்கொண்டார். முன்னோடியில்லாத இந்த சூழலில், அனைவரும் இணைந்து ஒற்றுமையாக செயல்படவும், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சீரான, சரியான பாதையில் நடவடிக்கை மேற்கொள்ளவும் வேண்டுமென அவர் வலியுறுத்தினார். இந்த நேரத்தில் அனைத்து நாடுகளும் விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அத்தியாவசிய மருந்துகள், சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் மலிவு விலையில் கிடைப்பதை உறுதிசெய்வதற்கு டிரிப்ஸ் உடன்படிக்கையை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மிகவும் அவசியமாக தேவைப்படும் இடங்களுக்கு நோயறிதல் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், சுகாதார வல்லுநர்கள் எல்லை தாண்டி செல்ல ஒப்புதல் வழங்க வேண்டுமெனவும் ஜி-20 நாடுகளை கேட்டுக்கொண்டார்.
ஏற்றுமதி கட்டுப்பாடுகளை கைவிடுவது மட்டுமே இக்கட்டான இந்த காலகட்டத்திற்கு தீர்வாகாது, அதையும் தாண்டி அனைவருக்கும் உணவு மற்றும் மருந்து பொருட்கள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். உண்மையில், அத்தகைய நடவடிக்கை இந்த முக்கியமான தயாரிப்புகளை அதிக விலைக்கு ஏலம் எடுப்பதற்கு வழிவகுக்கும், இதனால் அவை பிற நாடுகளை சார்ந்துள்ள ஏழை நாடுகள் அணுக முடியாததாகிவிடும் என்று கோயல் கூறினார். உலக வர்த்தக அமைப்பின் 12 வது அமைச்சர்கள் மாநாட்டில், உணவு பாதுகாப்பு நோக்கங்களுக்காக வகுக்கப்பட்ட வேளாண்மை தொடர்பான ஒப்பந்தத்தில் உள்ள வரலாற்று சமச்சீரற்ற தன்மையை அகற்ற ஒப்புக்கொள்வது, நிரந்தர, போதுமான மற்றும் அணுகக்கூடிய துறைகளை நிறுவுவதற்கான நீண்டகால அமைச்சரவை ஆணைக்கு அனுமதி வழங்குவது போன்ற மிகவும் பயனுள்ள மற்றும் நீடித்த நடவடிக்கைகளின் மூலமே மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளுக்கு இடையேயான பரந்த டிஜிட்டல் வேறுபாடுகளை அடிக்கோடிட்டுக் காட்டிய அமைச்சர், டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் மின்-வர்த்தகம் ஆகியவற்றில் பிணைப்பு விதிகளை உருவாக்குவதில் அவசரம் காட்டுவதை விட, வளரும் நாடுகள் மற்றும் குறைவான வளர்ச்சி கொண்ட எல்டிசி நாடுகளின் டிஜிட்டல் திறன்கள் மற்றும் தகுதிகளை வளர்ப்பதே உடனடித் தேவையாக இருப்பதின் அவசியத்தை விளக்கினார். மாறாக, பிணைப்பு விதிகளில் கவனம் செலுத்தினால், அது பின்தங்கிய நாடுகளின் நலன்களுக்கு எதிராக மிகவும் மட்டமற்ற களத்தை ஏற்படுத்தும் என்றும், அந்த நாடுகளில் உள்ள மகத்தான ஆற்றலிலிருந்து பயனடைவதற்கான வாய்ப்பை இழக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார். தொற்றுநோயின் விளைவாக, ஏராளமான தொழில் வல்லுநர்கள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் வெளிநாடுகளில் சிக்கிக் கொண்டு, தங்களின் விசா நிலையை பராமரிப்பதில் சிரமத்தை எதிர்கொள்வதாக தெரிவித்த அமைச்சர் கோயல், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நன்மைகளை வழங்குவதில் இந்தியா பிரகாசமான எடுத்துக்காட்டாக திகழ்வதாக தெரிவித்தார். அவர்களின் விசா நிலைக்கேற்ப பொருத்தமான தங்குமிடங்களை நாம் அனுமதிக்க வேண்டும் என்றும், அவர்களின் துயரத்தை நிவர்த்தி செய்ய தேவையான பிற நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இறுதியாக, 2 வது ஜி-20 வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர்கள் மெய்நிகர் கூட்டத்தை ஏற்பாடு செய்த சவுதி அதிபருக்கு கோயல் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
(रिलीज़ आईडी: 1624082)
आगंतुक पटल : 266