குடியரசுத் தலைவர் செயலகம்
செலவினங்களைக் குறைப்பதன் மூலம் ஜனாதிபதி மாளிகை ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
Posted On:
14 MAY 2020 5:00PM by PIB Chennai
கொவிட்-19 நிவாரண நடவடிக்கைகளுக்கு கூடுதல் நிதி கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்திய ஜனாதிபதி திரு. ராம்நாத் கோவிந்த், மார்ச் மாதத்தில் பிரதமர்-கேர்ஸ் நிதிக்கு தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கிய பின்னர், ஒரு வருடத்திற்கு தன்னுடைய சம்பளத்தில் 30 சதவீதத்தைக் கைவிட முடிவு செய்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் செலவினங்களை குறைப்பதன் மூலமும், நிதி ஆதாரங்களை உகந்த முறையில் பயன்படுத்துவதுடன், அதில் சேமிக்கப்பட்ட பணத்தை கொவிட்-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கும், மக்களின் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு ஈடு செய்வதன் மூலம் ஒரு எடுத்துகாட்டாகத் திகழ்வதற்கான அறிவுறுத்தல்களை குடியரசுத் தலைவர் வழங்கியுள்ளார். ஜனாதிபதியின் பார்வையில், இந்தியாவை தன்னம்பிக்கை கொண்ட நாடாக ஆக்கும் முயற்சியில் அரசாங்கத்தின் பார்வையை உணர இது ஒரு சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க பங்களிப்பாக இருப்பதுடன், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான சவாலை ஏற்றுக்கொள்ள தேசத்தை உற்சாகப்படுத்துவது மட்டுமல்லாமல் ஒரே நேரத்தில் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கான நமது பயணத்தைத் தொடரவும் உதவும். ஜனாதிபதி மாளிகை அதன் செலவினங்களைக் குறைக்க பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்:
- 2020-21 நிதியாண்டில் புதிய மூலதனப் பணிகள் எதுவும் எடுக்கப்படாது. தற்போது நடைபெற்று வரும் பணிகள் மட்டுமே நிறைவடையும்.
- சொத்துக்களை முறையாக பராமரிப்பதை உறுதி செய்வதற்காக பழுது மற்றும் பராமரிப்புப் பணிகள் குறைக்கப்படும்.
- அலுவலக நுகர்பொருள்களின் பயன்பாட்டில் கணிசமான குறைப்பு இருக்கும். உதாரணமாக, ஜனாதிபதி மாளிகையில் மின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் காகிதப் பயன்பாட்டைக் குறைத்து வீணடிப்பதைத் தவிர்ப்பதுடன் அலுவலகத்தின் சுற்றுச்சூழல் நட்பைச் சீராக்கும். மேலும் மின்ஆற்றல் மற்றும் எரிபொருளை அவற்றின் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் சேமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
- ஜனாதிபதி மாளிகை விருந்து சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படவிருந்த சொகுசு கார் வாங்குவதை ஒத்திவைக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளார். அதற்கு பதிலாக ஜனாதிபதி மாளிகை மற்றும் அரசாங்கத்தின் தற்போதைய வாகனகங்களே பகிரப்பட்டு இதுபோன்ற சந்தர்ப்பங்களுக்குப் பயன்படுத்தப்படும்.
- சமூக தொலைதூரக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதற்கும், அத்தகைய பயிற்சிகள் மேற்கொள்ளும் செலவினங்களை ஈடுகட்டுவதற்கும், உள்நாட்டு சுற்றுப்பயணங்கள் மற்றும் புதிய திட்டங்கள் கணிசமாகக் குறைக்கப்படும் மாறாக, பெரும்பாலும் தொழில்நுட்பத்தின் மூலம் ஜனாதிபதி மக்களைச் சந்திப்பார்.
- ஜனாதிபதி மாளிகையில் விழாக்கள் மற்றும் மாநில விருந்துகள் போன்ற நிகழ்ச்சிகளில் கீழ்காணும் வகையிலான செலவினங்கள் குறைக்கப்படும்:
அ. சமூக விலகலைப் பராமரிக்க குறைந்த அளவிலான விருந்தினர் பட்டியல்களைத் தயாரித்தல்,
ஆ. அத்தகைய சந்தர்ப்பங்களில் அலங்காரத்திற்கான பூக்கள் மற்றும் பிற பொருள்களைக் குறைந்த அளவில் பயன்படுத்துதல்.
இ. உணவு வகைப் பட்டியலை முடிந்தவரை குறைத்தல்.
இந்த நடவடிக்கைகள் நடப்பு நிதியாண்டில் ஜனாதிபதி மாளிகை பட்ஜெட்டில் கிட்டத்தட்ட 20 சதவீதத்தை மிச்சப்படுத்தும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இத்தகைய சிக்கன நடவடிக்கைகள் வெளி தொழிலாளர்கள்/ ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஆதரவில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது உறுதி செய்யப்படுகிறது. மேலும், ஏழை மக்களின் நலனுக்காக ஜனாதிபதி மாளிகை மேற்கொண்ட பிற நடவடிக்கைகளும் பாதிக்கப்படாது.
***********
(Release ID: 1624080)
Visitor Counter : 244