பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

ஜம்மு- காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களின் தகவல் அறியும் உரிமை சட்ட வழக்குகளை மத்திய தகவல் ஆணையம் நாளை முதல் விசாரிக்கும்

Posted On: 14 MAY 2020 3:21PM by PIB Chennai

ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மனுதாரர்களின் தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆர்டிஐ) மனுக்களை மத்திய தகவல் ஆணையம் நாளை மே 15 ம் தேதி  முதல் விசாரிக்கத் தொடங்கும் என்று வடகிழக்கு பிராந்திய மேம்பாடு ( தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், ஓய்வூதியம், பொதுமக்கள் குறைதீர்வு, அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் இன்று தெரிவித்துள்ளார். புதுதில்லியில் தம்மைச் சந்தித்த தலைமை தகவல் ஆணையர்       திரு.பிமல் ஜுல்காவுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பின் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மனுதாரர்கள் தங்கள் ஆர்டிஐ மனுக்களை வீட்டில் இருந்தவாறே தாக்கல் செய்யலாம் என்றும், மத்திய தகவல் ஆணையத்திடம் மேல் முறையீடுகளுக்குக் கூட யாரும் வெளியே பயணம் செய்யத் தேவையில்லை என்றும் அமைச்சர் கூறினார்.         ‘’வீட்டில் இருந்து நீதி‘’ என்னும் புதிய கலாச்சாரத்துக்கு இது வழிவகுக்கும் என்று டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார்.

இரு யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்த மனுதாரர்கள் தங்களால் அமர்த்தப்பட்ட அதிகாரிகள் முன்பு முதல் முறையீட்டை தாக்கல் செய்யலாம். மத்திய தகவல் ஆணையம் முன்பான இரண்டாவது மேல் முறையீட்டு விசாரணைக்கு, வீட்டில் இருந்தவாறு ஆஜராகும் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், மனுதாரர்கள் எந்த நேரமும் ஆன்லைன் மூலம் மனுக்களைத் தாக்கல் செய்யலாம்.

மறுசீரமைப்பு சட்டம் 2019 க்கு முன்பு, முந்தைய ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டிருந்ததற்கு மாறாக, தற்போது ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் தொடர்பான ஆர்டிஐ மனுக்களை இந்தியாவைச் சேர்ந்த எந்தக் குடிமகனும் தாக்கல் செய்யலாம் என அமைச்சர் தெரிவித்தார்



(Release ID: 1623849) Visitor Counter : 56