பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய கடற்படை தயாரித்த புதுமையான, குறைந்த செலவிலான, தனிநபர் பாதுகாப்பு கவசம் : காப்புரிமை பெறுவது மொத்த உற்பத்திக்கு வழி வகுக்கிறது
प्रविष्टि तिथि:
14 MAY 2020 3:27PM by PIB Chennai
இந்திய கடற்படையினரால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய, மருத்துவ தனி நபர் காப்பீட்டு கவசத்தை, விரைந்து மொத்த உற்பத்தி செய்வதன் ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவுசார் சொத்துக்களுக்கு காப்புரிமை பெற உதவும் அமைப்பு, மத்திய அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என் ஆர் டி சி தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து காப்புரிமை கோரி பதிவு செய்துள்ளது.
(1)LRXY.jpeg)
குறைந்த செலவிலான இந்த தனிநபர் பாதுகாப்புக் கவசத்தை, கடற்படை மருத்துவக் கழகத்தில் சமீபத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, புதிய கண்டுபிடிப்பு கண்டுபிடிப்புகளுக்கான பிரிவில் பணிபுரியும் இந்திய கடற்படையின் மருத்துவரால் தயாரிக்கப்பட்டது. கடற்படைக்குச் சொந்தமான, மும்பையில் உள்ள கப்பல் பட்டறையில், பரிசோதனை அடிப்படையில் இந்த தனிநபர் பாதுகாப்பு கவசங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளன
இந்திய கடற்படையால் தயாரிக்கப்பட்டுள்ள, இந்த தனிநபர் பாதுகாப்பு கவசங்கள், சந்தையில் கிடைக்கும் மற்ற தனிநபர் பாதுகாப்பு கவசங்களை விட, அதிக அளவு பாதுகாப்பு தரும் வகையிலான சிறப்பு துணியால் செய்யப்பட்டவை. பிற கவசங்களை விட, இந்த கவசங்களில், “சுவாசித்தல்” மேலும் அதிகமாக உள்ளது. எனவே இந்தியாவைப் போல மிகவும் வெப்பமான, ஈரப்பதம் கொண்ட வானிலையிலும் பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த கவசங்கள் அமைந்துள்ளன. இதற்கான தொழில்நுட்பம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டுள்ளது
(रिलीज़ आईडी: 1623847)
आगंतुक पटल : 267
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada