புவி அறிவியல் அமைச்சகம்

வங்காள விரிகுடா தெற்கு அந்தமான் கடற்பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: இது சூறாவளிப் புயலாக மாறலாம் இந்திய வானிலை ஆய்வு துறை எச்சரிக்கை

प्रविष्टि तिथि: 13 MAY 2020 6:30PM by PIB Chennai

இந்திய வானிலை ஆய்வு துறையின் சூறாவளி எச்சரிக்கைப் பிரிவு கூறியுள்ளதாவது: வங்காள விரிகுடாவின் கிழக்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் கடற்பகுதியில் 13 மே 2020 அன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.

 

இது, வங்காள விரிகுடாவின் தெற்கில் மத்திய பகுதிகளில் 15 ஆம் தேதி அன்று மேலும் அதிகரித்து, உயர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். 16ஆம் தேதி மாலை மேலும் அதிகரித்து வங்காள விரிகுடாவில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள மேற்கு மத்திய பகுதிகளிலும் சூறாவளிப் புயலாக உருவெடுக்கும். அது வட மேற்கு முகமாக நகர்ந்து 17 மே 2020 வரை மேலும் அதிகரிக்கும்.அதன் பிறகு வடக்கு வடகிழக்கு முகமாக திரும்பக்கூடும்.

 

இதன் காரணமாக தென்மேற்குப் பருவமழை வங்காள வளைகுடாவின் தெற்கு பகுதிகளிலும், அந்தமான் கடல் பகுதிகளிலும், அந்தமான் நிக்கோபார் தீவுப் பகுதிகளிலும் முன்னதாகவே மே  16ம் தேதி அன்று தொடங்கும்.

 

வங்காள விரிகுடா விரிகுடாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளிலும் அதையொட்டி உள்ள அந்தமான் கடல் பகுதிகளிலும் 15 மே 2020 முதல் மிக மோசமான வானிலை நிலவும்


(रिलीज़ आईडी: 1623823) आगंतुक पटल : 237
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Odia