அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கொவிட்-19 பரவல் சூழலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் சந்திக்கும் சவால்களைச் சமாளிக்க உபகரணங்கள், தொழில்நுட்பம், நுட்பங்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஆதரவு

Posted On: 13 MAY 2020 6:37PM by PIB Chennai

கொவிட்-19 பரவல் சூழலில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்முயற்சிகளை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மேற்கொண்டுள்ளதுடன், அவர்கள் சந்திக்கும் சவால்களுக்கு தொழில்நுட்பரீதியில் தீர்வு காணும் வழிகளையும் கண்டறிந்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் தொடர்பான தகவல்களை கல்வியுடன் வழங்கவும், கொவிட்-19 காரணமாக, அறிவுசார் குறைபாடுகளுடன் தனித்திருக்கும் நபர்களுக்கு உற்சாகமூட்டும் விதத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் மின்னணு உபகரணத்தை சென்னையிலுள்ள ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி உருவாக்கியுள்ளது. அறிவுசார் குறைபாடுகள் உள்ளவர்கள் கைபேசிகள் மற்றும் மடிக்கணினிகள் வழியாக வேடிக்கை விநோதங்களைக் கற்றுக்கொள்ள இது உதவும். இந்த மின்னணு உபகரணம் பிற பிராந்திய மொழிகளிலும் மாற்றும் வண்ணம் அமைந்துள்ளது. இதன் பீட்டா பதிப்பு, 200 மாற்றுத்திறனாளி குழந்தைகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அணிந்து கொள்ளக்கூடிய உணர்வுக் கருவியை கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி உருவாக்கியுள்ளது. இதன்மூலம் வீடுகளில் தனித்திருக்கும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மற்றும் தனிமை வார்டுகளில் உள்ளவர்களின் நடவடிக்கைகளை தொலைவில் இருந்தவாறு கண்காணிக்க முடியும். முதியோரின் பலவீன அளவையும் கண்டறியக் கூடியதாக இந்தக் கருவி இருக்கும். அதிக அளவில் உற்பத்தியாகும் போது இந்தக் கருவியின் விலை ரூ.1500 ஆக இருக்கும்.

( மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்- டாக்டர் கொங்க கோபிகிருஷ்ணா, விஞ்ஞானி-இ, DST, மின்னஞ்சல்; k.gopikrishna@nic.in, தொலைபேசி: 011 26590298)(Release ID: 1623819) Visitor Counter : 93